சுடச்சுட

  
  france

  ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் பின்களம் படு மோசமாக இருந்தது. அரணாக நிற்க வேண்டிய டிஃபண்டர்கள் செயலிழந்து நின்றதால், பிரான்ஸின் 5 வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் குரூப் இ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் அந்த அணி குரூப்-16 சுற்றுக்கு முன்னேறுவது உறுதிப்படுத்தப்படவில்லை.

  100-வது கோல்: சால்வடாரில் இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் கார்னரில் இருந்து வந்த "கிராûஸ' ஆலிவர் ஜிராடு தலையால் முட்டி கோல் அடித்தார். இது உலகக் கோப்பையில் பிரான்ஸ் பதிவு செய்யும் 100ஆவது கோலாகும்.

  இந்த கோல் அடித்த அடுத்த 66 விநாடிகளில் கரிம் பென்ஸிமா கொடுத்த பாûஸ இடதுபுறத்தில் இருந்து அற்புதமாக கோல் அடித்தார் பிளெய்ஸ் மடூடி.

  பின்னர், முதல் பாதி முடிவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் மைதானத்தின் பாதியில் இருந்து பந்தை கடத்தி வந்த கிரெüடு அதை வலது புறத்தில் இருந்த வேல்பெனாவிடம் பாஸ் செய்ய, அதை அவர் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் 3-0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. முன்னதாக பிரான்ஸýக்கு கிடைத்த பெனால்டி கிக்கை அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்ஸிமா வீணடித்தார்.

  ஆனால் 67ஆவது நிமிடத்தில் சக வீரர்கள் கடத்திக் கொடுத்த பாûஸ ஸ்விட்சர்லாந்தின் பின்கள வீரர்களை ஏமாற்றி கோல் அடித்தார் பென்ஸிமா. அதேபோல 73ஆவது நிமிடத்தில் மெüசா சிசாகோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

  கடைசி நேரத்தில் சுதாரித்த ஸ்விட்சர்லாந்து அணிக்கு 81ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக்கை பிளெரிம் ஜிமெய்லி கோல் அடித்தார். அதேபோல அந்த அணியின் கிரையன்ட் ஜாகா 87ஆவது நிமிடத்தில் பந்தை வலைக்குள் செலுத்தினார். ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  எதிரும் புதிரும்...

   

  எங்கள் ஆட்டத்திறன் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தை ஈகுவேடாருக்கு எதிராகவும் செயல்படுத்த முயற்சிப்போம். நான் கோல் அடிப்பதற்கு முன்னால் நடுவர் விசில் அடித்ததை கவனிக்கவில்லை. எனவேதான் இலக்கை நோக்கி உதைத்தேன். எல்லாவற்றையும் விட வெற்றிதான் முக்கியமானது.

  கரீம் பென்ஸிமா,பிரான்ஸ் முன்கள வீரர்.

   

  இத்தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது மோசமான நாள். பிரான்ஸ் அணியினர் தங்களுக்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களது பதில் தாக்குதலும் சிறப்பாக இருந்தது. முன்னதாகவே அவர்களை கோல் அடிக்க வாய்ப்பளித்ததே தோல்விக்கான காரணம்.

   

  ஓட்மர் ஹெட்ஸ்ஃபெல்ட்,ஸ்விட்சர்லாந்து பயிற்சியாளர்.

   

  1998 உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியையும், தற்போதுள்ள அணியையும் ஒப்பிடக் கூடாது. அப்போதுள்ள சூழல் வேறு. இப்போதுள்ள சூழல் வேறு. ஆனால், தற்போதுள்ள அணியினரிடம் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனநிலை மேலோங்கியுள்ளது. இது வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்குமா எனத் தெரியாது. ஆனால், இந்த நிலை அப்படியே நீடிக்க வேண்டும்.

   

  டாஸ்சம்பே,பிரான்ஸ் பயிற்சியாளர்.

   

  ""போர்ச்சுகலுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் போல, பிரேசிலுக்கு நெய்மரைப் போல, ஆர்ஜெண்டினாவுக்கு மெஸ்ஸியைப் போல, போஸ்னியாவுக்கு எடின் ஷெகோ முக்கியத்துவம் வாய்ந்தவர்''

   

  சஃபெட் சூசிக், போஸ்னியா பயிற்சியாளர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai