சுடச்சுட

  
  messy

  இஞ்சுரி டைம் எனப்படும் கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து உதவ ஈரானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது. அத்துடன் குரூப் -16 சுற்று வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியது.

  மினீரோ மைதானத்தில் நடைபெற்ற குரூப் எஃப் பிரிவினருக்கான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தியது.

  ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். குறிப்பாக ஆர்ஜெண்டினா முன்கள வீரர்கள் ஈரான் கோல் எல்லையில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், ஈரான் டிஃபண்டர்கள் அவர்களது கோல் முயற்சிக்கு அணை போட்டனர். இதனால் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

  இரண்டாவது பாதியில் ஆர்ஜெண்டினா பயிற்சியாளர் சபெல்லோ 4-3-3 என்ற ஃபார்மட்டைக் கையில் எடுத்தார். இதனால் ஹிகுயின், செர்ஜியா ஆகுவேரா, மெஸ்ஸி ஆகியோர் முன்களத்தில் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால், ஈரான் கோல் கீப்பர் அலிரிஸா ஹிகிகி பந்தை வலைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் இந்த ஆட்டமும் கோல் ஏதும் அடிக்கப்படமால் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

  நேரம் நெருங்க நெருங்க ஆர்ஜெண்டினா வீரர்கள் முன்களத்தில் புகுந்து விளையாடினர். இதனால் ஆர்ஜெண்டினா அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை மெஸ்ஸி கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தார்.

  பின் இரு அணிகளும் மாற்று வீரர்களைக் களமிறக்கி கோல் அடிக்க முயற்சித்தது. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

  90 நிமிடங்கள் முடிவிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இஞ்சுரி டைமில் மெஸ்ஸி ஈரானின் இரண்டு வீரர்களைக் கடந்து தொலைவில் இருந்து இடது காலில் பந்தை தூக்கி அடித்தார். ஈரான் கோல் கீப்பர் பறந்து தடுக்க முயன்றார்.

  இருப்பினும் பந்து வலைக்குள் தஞ்சம் புகுந்தது. மெஸ்ஸி உள்ளிட்ட ஆர்ஜெண்டினா வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடிக்கும் 2-வது கோல் இது. முன்னதாக போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்திலு மெஸ்ஸி கோல் அடித்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai