சுடச்சுட

  
  roone

  இத்தாலியை அடுத்து உருகுவேயிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இதனால் இந்த உலகக் கோப்பையின் முதல் சுற்றிலேயே இங்கிலாந்து வெளியேறியது. உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் உலகக் கோப்பை கோலை அடித்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ரூனி, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

  "ஒவ்வொரு ஆட்டத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டோம். ஆனால், துரதிருஷ்டவசமாக எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த தோல்வி மனரீதியாக பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலுக்கு வந்தும், வீட்டில் இருந்தபடியும் எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, ரூனி தனது ஃபேஸ்புக் இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai