சுடச்சுட

  

  இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஐந்து டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் தோனி தலைமையிலான இந்திய அணி மும்பையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை லண்டன் புறப்பட்டு சென்றது.

  மீண்டும் சீனிவாசன் தலைவர்:

  பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் தொடர்ந்து 14-வது ஆண்டாக தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கல்பாத்தி அகோரம், பிரபாகர் ராவ், ராகவன், பி.எஸ்.ராமன், கனகராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், காசி விஸ்வநாதன் செயலராகவும், பழனி இணைச் செயலராகவும், நரசிம்மன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

   

  பாகிஸ்தான் ஆதரவு: இதற்கிடேயே, சீனிவாசன் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai