சுடச்சுட

    
    sports1

    மிரோஸ்லவ் க்ளோஸ் சரியான நேரத்தில் கோல் அடித்து கை கொடுக்க கானா அணிக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி டிரா செய்தது. இந்த ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (15) அடித்த பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோவின் சாதனையை க்ளோஸ் சமன் செய்தார்.

    குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் ஃபோர்டெல்ஸாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 2006 மற்றும் 2010-இல் இடம்பெற்றிருந்த அனுபவ வீரர்களைக் கொண்டிருக்கும் ஜெர்மனி அணி, போர்ச்சுகலைப் போல கானாவையும் எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கானா அணியிடம் ஜெர்மனியின் முயற்சி பலிக்கவில்லை. இதனால் முதல்பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

    இடைவேளைக்குப் பின் 51-வது நிமிடத்தில் வலதுபுறத்தில் இருந்து வந்த கிராûஸ ஜெர்மனியின் மரியோ கோட்ஸ் கானா அணியின் இரண்டு டிஃபண்டர்களுக்கு இடேயே புகுந்து தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த 3 நிமிடங்களில் அதேபோல கானாவின் ஆண்ட்ரூ இயு ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை ஆனது. இந்த இரு கோல்களுமே லாங் ரேஞ்ச் பாஸ்களின் மூலம் தலையால் முட்டி அடிக்கப்பட்டவை.

    பின்னர் 63-வது நிமிடத்தில் ஜெர்மனியின் டிஃபண்டர்கள் செய்த தவறை சரியாகப் பயன்படுத்தி துல்லியமாக பாஸ் செய்தனர் கானா வீரர்கள். விளைவு, கானா வீரர் கியான் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    ஒருவழியாக 71-வது நிமிடத்தில் கார்னர் கிக்கை க்ளோஸ் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமநிலைப்படுத்தினார். பின் இரு அணியும் ஆக்ரோஷமாக மோதியும் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

     

    ரொனால்டா சாதனையை சமன் செய்த க்ளோஸ்

    பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (15 கோல்கள்) அடித்தவர் வரிசையில் முதலிடத்தில் இருந்தார். ஜெர்மனியின் க்ளோஸ் 14 கோல்களுடன் 2-வது இடத்தில் இருந்தார். எனவே, இந்த உலகக் கோப்பை தொடங்கும் போதே ரொனால்டோவின் சாதனையை க்ளோஸ் சமன் செய்வார் அல்லது முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்து ரொனால்டோவின் சாதனையை சமன் செய்தார் க்ளோஸ். இன்னும் ஜெர்மனி அணிக்கு ஆட்டங்கள் இருப்பதால் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையை க்ளோஸ் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

    ரொனால்டோ பாராட்டு

    தனது சாதனையை சமன் செய்த க்ளோஸýக்கு ரொனால்டோ பாராட்டு தெரிவித்துள்ளார். "இந்த சாதனை வட்டத்தில் நுழைந்ததை வரவேற்கிறோம்' என ரொனால்டோ வாழ்த்து தெரிவித்திருந்தார். ரொனால்டோ ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 2006- உலகக் கோப்பையில் ஜெர்மனிக்கு எதிராக தனது கடைசி கோலை அடித்திருந்தார்.

    2002-இல் இருந்து உலகக் கோப்பையில் பங்கேற்று வரும் க்ளோஸின் (36) இந்த சாதனைக்கு அந்நாட்டு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளது. "நன்றி, வயதான வீரனே', "ஜெர்மனியை மீட்ட க்ளோஸ்' என ஜெர்மனியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

     

    "வெற்றி பெற்ற அணியில் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். போட்டியின் ஆரம்பத்தில் இருந்து ஆடினேனா? இல்லையா என்பது விஷயம் அல்ல. உலகக் கோப்பையில் 20 ஆட்டங்களில் பங்கேற்று 15 கோல்கள் அடித்தது என்பது மோசமானது அல்ல'

    மிரோஸ்லவ் க்ளோஸ், ஜெர்மனி வீரர்.

     

    உலகக் கோப்பையில்  அதிக கோல்கள் அடித்தவர்கள்

    வீரர்கள்                                             கோல்கள்

    ரொனால்டோ (பிரேசில்),

    மிரோஸ்லவ் க்ளோஸ் (ஜெர்மனி)    15

    ஜெரார்டு முல்லர் (ஜெர்மனி)    14

    ஜஸ்ட் ஃபான்டெய்ன் (ஃபிரான்ஸ்)    13

    பீலே (பிரேசில்)    12

    சாண்டர் கோக்ஸிஸ் (ஹங்கேரியா),

    ஜுர்ஜென் கிளின்ஸ்மன் (ஜெர்மனி)    11

    ஹெல்மட் ரன் (ஜெர்மனி),

    கேப்ரியல் படிஸ்டுடா (ஆர்ஜெண்டினா),

    கேரி லினிகெர் (இங்கிலாந்து),

    டியோஃபிலோ கபிலஸ் (பெரு),

    கிர்ஸ்கார்ஸ் லடோ (போலந்து)    10

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai