சுடச்சுட

  
  odem

  பீட்டர் ஓடெம்விங்கீ (படம்) கோல் அடித்து கைகொடுக்க 1-0 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தியது நைஜீரியா. இதன் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

  இந்த வெற்றியின் மூலம் ஆர்ஜெண்டினாவுக்கு அடுத்தபடியாக குரூப் -16 சுற்றுக்கு நைஜீரியா முன்னேற உள்ளது. இந்த உற்சாகத்துடன் வரும் வியாழக்கிழமை ஆர்ஜெண்டினாவை எதிர்கொள்ள உள்ளது. இதற்கு முன் 2010-இல் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் 1-0 என ஆர்ஜெண்டினா வெற்றி பெற்றது. வெற்றிக்கான கோல் அடித்த பீட்டர் ஒடெம்விங்கீ கூறுகையில் "உலகக் கோப்பையில் வெற்றி பெற்று 16 ஆண்டுகள் ஆகிறது என்பதை அறிந்திருந்தோம். ஈரானுக்கு எதிரான ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் டிரா ஆனதில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பர். தற்போது இந்த வெற்றி அவர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai