Enable Javscript for better performance
புறக்கணிக்கப்படும் பீலே?- Dinamani

சுடச்சுட

  

  புறக்கணிக்கப்படும் பீலே?

  By dn  |   Published on : 23rd June 2014 05:22 AM  |   அ+அ அ-   |    |  

  pilea

  பிரேசிலில் தலைசிறந்த கால்பந்து வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், கால்பந்தில் பிரேசில் கோலோச்சும் என்பதை உலக அரங்கில் அழுத்தமாக உணர்த்தியவர் பீலே. பிரேசிலுக்காக மூன்று முறை உலகக் கோப்பை வென்று தந்தவர். கால்பந்தின் பிதாமகன் என போற்றப்படுபவர்.

  அப்பேர்பட்டவரின் சொந்த மண்ணில் அரை நூற்றாண்டுக்குப் பின் உலகக் கோப்பை நடைபெறுகிறது. ஆனால், வையம் போற்றும் அந்த ஜாம்பவானை பிரேசிலும் சரி, ஃபிஃபாவும் சரி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

  சா பாலோவில் தொடக்க விழா நடைபெற்றது. பிரேசில் அதிபர் டில்மா ரூசெஃப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர். ஆனால், பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் சா பாலோவுக்கு மிக அருகில் உள்ள சான்டோஸ் நகரில்தான் பீலே வசித்து வருகிறார்.

  அதேபோல பிரேசில் மோதிய 2-வது ஆட்டத்தைப் பார்க்க சா ஃபோர்டெல்சா சென்ற அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தை வானொலியில் கேட்டதாக அவரே தெரிவித்தார். பீலேவுக்கு ஃபிஃபா முறையான அழைப்பு விடுத்து கெüரவிக்கத் தவறியதன் விளைவுதான் இந்த குளறுபடிக்கு காரணம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

  இதையெல்லாம் விட ஆட்டத்தின் முதல் பாதி முடிந்ததும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் பீலே தொடர்பான காட்சிகள் இடம்பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  ஜூலை 13-ம் தேதி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி கிஸ்லே பண்ட்சென் கோப்பை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதைவிட பீலேவை வேறெந்த விதத்திலும் அவமதித்து விட முடியாது என கொதிக்கின்றனர் அவர் ரசிகர்கள்.

  ஆனால், வெளிநாட்டினருக்கு வேண்டுமானால் பீலே பெரிய ஆளாகத் தெரியலாம். எங்களைப் பொருத்தவரை அவர் பெரிய விஷயம் அல்ல என்பது அவரது எதிர்ப்பாளர்கள் கருத்து. "பிரேசிலில் நவீன கால்பந்தின் புதிய சகாப்தம் பீலே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவை எல்லாம் கடந்த காலம். பீலேவைப் போல மெச்சத் தகுந்த பல வீரர்கள் பிரேசிலில் உள்ளனர். குறிப்பாக சாக்ரடிஸ். பிரேசில் அரசியலில் தொடர்பில் உள்ள சாக்ரடிஸின் கருத்து எங்களுக்கு முக்கியம். ஏனெனில் பீலே அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறார்' என பீலேவுக்கு எதிரான கருத்துகளை பத்திரிகையாளர்களும், கால்பந்து நிபுணர்களும் முன் வைக்கின்றனர்.

   

  ஆஃப் சைடு...

   

  *போஸ்னியாவின் எடின் செகோ இந்த உலகக் கோப்பையில் அதிக முறை இலக்கை நோக்கி அடித்தும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

  *நைஜீரியா, மெக்ஸிகா இரு அணிகளும் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க அனுமதிக்க வில்லை.

  *பீலே, சீலருக்கு அடுத்ததாக நான்கு உலகக் கோப்பையில் கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஜெர்மனியின் க்ளோஸ்.

   

  2-1 என பின்தங்கியிருந்த போது வீரர்கள் மிகவும் சோர்வடைந்து விட்டனர். கடைசியாக எங்களுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. திறமை மற்றும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு கோல் அடித்தோம். பின்னடைவில் இருந்து மீண்டு வந்து ஆட்டத்தை சமன் செய்ததில் மகிழ்ச்சி.

   

  ஜோசிம் லியோ, ஜெர்மனி பயிற்சியாளர்.

   

  ஆட்டங்கள்

   

  ஜூன் 23: ஆஸ்திரேலியா - ஸ்பெயின்

  நெதர்லாந்து - சிலி (நேரம்: இரவு 9.30)

   

  ஜூன் 24: கேமரூன் - பிரேசில்

  குரோஷியா - மெக்ஸிகோ (நேரம்: அதிகாலை 1.30)

  kattana sevai