சுடச்சுட

  
  dem

  இந்த சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி பிரிட்டன் தலைநகர் லண்டனில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

  128ஆவது ஆண்டாக நடைபெறும் இப்போட்டி புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாமாகும். இப்போட்டியில் வீரர்கள் வெள்ளை நிற உடை மட்டுமே அணிய வேண்டும்.

  ஆடவர் பிரிவில் நடப்புச் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே களமிறங்குகிறார்.

  அவருக்கு சவால் அளிக்க ஸ்பெயினின் நடாலும், செர்பியாவின் ஜோகோவிச்சும், ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரரும் தயாராக உள்ளனர். ஆனால் நடாலுக்கும், ஜோகோவிச்சுக்கும் காயம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால், அவர்களிடமிருந்து சிறந்ததொரு ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என்று கருதப்படுகிறது. இதனால், 8ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெல்ல ஃபெடரருக்கு சிறப்பான வாய்ப்பு வந்துள்ளதாகவும் டென்னிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  மகளிர் பிரிவு: கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் மகளிர் பிரிவில் ஃபிரான்ஸின் பர்டோலி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். டென்னிஸிலிருந்து தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார். இம்முறை கோப்பையை வெல்லக் கூடியவர்களில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா, சீனாவின் லீ நா ஆகியோர் முன்னணியில் உள்ளனர். புல்தரை என்பதால் முன்னணி வீராங்கனைகள் முதல் சுற்றுகளிலேயே கூட சறுக்கலைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, எந்த வீராங்கனையும் எழுச்சி பெற்று கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

   

  ஆடவர் பிரிவு

  ஆண்டு    வீரர்

  2013     ஆன்டி முர்ரே (பிரிட்டன்)

  2012     ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து)

  2011     நோவக் ஜோகோவிச் (செர்பியா)

  2010     ரஃபேல் நடால் (ஸ்பெயின்)

  2009     ரோஜர் ஃபெடரர் (ஸ்விஸ்)

  2008     ரஃபேல் நடால் (ஸ்பெயின்)

  2007     ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து)

  2006     ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து)

  2005     ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து)

  2004     ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து)

   

  மகளிர் பிரிவு

  ஆண்டு    வீராங்கனை

  2013     மரியான் பர்டோலி (ஃபிரான்ஸ்)

  2012     செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)

  2011     பெர்டா குவிட்டோவா (செக் குடியரசு)

  2010     செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)

  2009     செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)

  2008     வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)

  2007     வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)

  2006     அமிலி மெளரீஸ்மோ (ஃபிரான்ஸ்)

  2005     வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)

  2004     மரியா ஷரபோவா (ரஷியா)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai