சுடச்சுட

    

    அமெரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் சில்வெஸ்டர் வரிலா இஞ்சுரி டைம் எனப்படும் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து அசத்த போர்ச்சுகல் 2-2 என ஆட்டத்தை டிரா செய்தது. அதோடு, போட்டியில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறும் சூழலைத் தவிர்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது.

    கடைசி நிமிடத்தில் கோல் அடிக்க வாய்ப்பளித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது அமெரிக்கா.

    குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளுக்கான ஆட்டம் பிரேசிலின் மனாஸ் நகரில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

    ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் அமெரிக்க டிஃபண்ட்ர்கள் செய்த தவறை சரியாகப் பயன்படுத்தி நானி ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் 1-0 என முன்னிலை பெற்றது. பின் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் அமெரிக்க வீரர்கள் விழிப்புடன் இருந்தனர். ஆனால், போர்ச்சுகல் பின்களம் அதைவிட விழப்பாக இருந்ததால் அமெரிக்க வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதற்கிடையே தனி ஆளாக கோல் கம்பத்தை நோக்கி முன்னேறிய ரொனால்டோ கோல் வாய்ப்பை நழுவ விட்டார்.

    ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் அமெரிக்க அணிக்கு கார்னர் கிக் கிடைத்தது. அப்போது போர்ச்சுகல் வீரர் நானி பந்தை தலையால் முட்டினார். ஆனால், பந்து அமெரிக்க வீரர் ஜோன்ஸிடம் தஞ்சம் புகுந்தது. நிறுத்தி நிதானித்து அதை அவர் கோல் அடித்தார். ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது. பின்னர் சிறிது நேரத்தில் நானிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை. இதற்கிடையே அமெரிக்காவுக்கு கோல் அடித்த ஜோன்ஸýக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 81-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர்கள் தங்களுக்குள் எப்படி எப்படியோ பந்தை பாஸ் செய்தனர். கடைசியில் கேப்டன் கிளின்ட் டெம்சே பந்தை மார்பில் தட்டி வலைக்குள் செலுத்தினார். இதனால் 2-1 என அமெரிக்கா முன்னிலை பெற்றது. இது போர்ச்சுகல் பின்கள வீரர்கள் வேடிக்கை பார்த்தால் நிகழந்த கோல் என்றும் சொல்லலாம்.

    கிட்டத்தட்ட அமெரிக்கா வெற்றி பெற்று விட்டது; அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது என நினைக்கப்பட்டது. ஆனால், இஞ்சுரி டைமில் (90+5) இடதுபுறத்தில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கொடுத்த கிராûஸ தலையால் முட்டி கோல் அடித்தார் போர்ச்சுகலின் சில்வெஸ்டர் வரிலா. ஆட்டம் 2-2 என டிரா ஆனது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது.

     

    போர்ச்சுகல் சாம்பியனா?: ரொனால்டோவுக்கே நம்பிக்கை இல்லை

    போர்ச்சுகல் அணியின் மீது ஒட்டுமொத்த உலகமும் நம்பிக்கை வைத்திருப்பதற்கு காரணம் அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ. சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற அவரது செயல்பாட்டைப் பொருத்துத்தான் போர்ச்சுகல் அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும் என கருதப்படுகிறது. ஆனால், அவர் இந்த தொடர் தொடங்குவதற்கு முன், முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டார். இருப்பினும், காயத்தை பொருட்படுத்தாது இரண்டு ஆட்டங்களில் பங்கேற்றார். ஆனால், இன்னும் கோல் கணக்கைத் தொடங்கவில்லை.

    இந்த உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணியின் செயல்பாடு குறித்து ரொனால்டோ கூறியது:

    உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் தகுதிபெறுவதிலேயே பிரச்னை இருந்தது. (தகுதிச் சுற்றில் ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அணியை தகுதி பெறச் செய்திருந்தார்) எனவே, நாங்கள் உலக சாம்பியன் பட்டம் வெல்வோம் என நினைக்கவில்லை. வேகமாக ஓடுதல் உள்ளிட்ட சில யுத்திகளை எங்களால் செய்ய முடியாது. அதோடு பெபேவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது, ஃபேபியோ கோயன்ட்ரோ காயமடைந்தது போன்றவை எங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு. எனவே, பணிவுடன் எங்கள் எல்லையை அங்கீகரிக்க வேண்டும். சில அணிகளில் சில தரமான வீரர்கள் உள்ளனர். இந்த உலகக் கோப்பைக்கு வரவில்லை எனில், சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் என்ற பெருமையுடன் வீட்டில் அமர்ந்திருப்பேன். இருப்பினும் நாடு என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு உலகக் கோப்பையில் பங்கேற்றேன் என ரொனால்டோ தெரிவித்தார்.

     

    கடைசி நிமிட துரதிருஷ்டம்

    வெற்றி கை நழுவியது குறித்து அமெரிக்க பயிற்சியாளரும், 1990-இல் உலகக் கோப்பை வென்ற அமெரிக்க அணியில் இருந்தவருமான கிளின்ஸ்மன் கூறுகையில் "கடைசி வினாடிகள் துரதிருஷ்டவசமானவை. இருந்தாலும் எங்கள் வீரர்கள் அபாரமாக ஆடினர். ஜெர்மனிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். ஜெர்மனி ஓய்வு பெற்று அடுத்த ஆட்டத்துக்கு தயாராக உள்ளது. நாங்கள் பயணம் செய்து தயாராக வேண்டும். இருப்பினும் ஜெர்மனியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai