சுடச்சுட

  
  spt2

  தென் கொரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த அல்ஜீரியா அணி 1982-ம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் முதன்முறையாக உலகக் கோப்பையில் முதல் சுற்றைக் கடந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  குரூப் எச் பிரிவில் இடம்பெற்றுள்ள தென் கொரியா- அல்ஜீரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை போர்டோ அலெஜ்ரி நகரில் நடைபெற்றது. தென் கொரியா பின்களத்தை கதி கலங்க வைத்த அல்ஜீரிய அணிக்கு இல்ஸாம் சில்மனி, ரஃபிக் ஹலிசி, அப்துல்மெüமே ஆகியோர் கோல் அடித்து உதவ அந்த அணி முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது.

  பின் இரண்டாவது பாதியில் கொரிய வீரர்கள் சுதாரிப்புடன் ஆடினர். கொரிய அணிக்கு சான் ஹெயுங் மற்றும் ஜாசியோல் கோல் அடித்து உதவினர். இருப்பினும் இது வெற்றிக்கு உதவவில்லை. இதற்கிடையே 62-வது நிமிடத்தில் அல்ஜிரியா அணிக்கி பிராஹிமி ஒரு கோல் அடித்துக் கொடுத்தார். முடிவில்  அல்ஜீரியா 4-2 என வெற்றி பெற்றது.

  இந்த வெற்றியின் மூலம் குரூப் எச் பிரிவில் பெல்ஜியத்துக்கு அடுத்ததாக 3 புள்ளிகளடன் அல்ஜீரியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

   

  ஆட்டங்கள்

  ஜூன் 24: இத்தாலி - உருகுவே

                    கோஸ்டா ரிகா - இங்கிலாந்து

                    (இரவு 9.30)

  ஜூன் 25: ஜப்பான் - கொலம்பியா

                     கிரேக்கம் - ஐவரி கோஸ்ட்

                     (இரவு 12.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai