சுடச்சுட

  

  உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம்

  By dn  |   Published on : 24th June 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.

    இந்த பயணம் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி ஃபிப்ரவரி 1-ம் தேதி வரை நீடிக்கிறது.

  ஒருநாள் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து அணியும் பங்கேற்கவுள்ளது.

  இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை அட்டவணையை வெளியிட்டது.

  இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விடுத்த அறிக்கை:

  இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 12-16 வரை அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் டிசம்பர் 26 முதல் 30 வரை மெல்போர்னிலும், கடைசி டெஸ்ட் ஜனவரி 3 முதல் 7 வரை சிட்னியிலும் நடைபெறவுள்ளது.

  2003-2004 ஆம் ஆண்டுக்குப் பின் பிரிஸ்பேன் ரசிகர்கள் முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியின் ஆட்டத்தைப் பார்க்கவுள்ளனர்.

  சிறிது இடைவெளிக்குப் பின் ஜனவரி 16-ம் தேதி முதல் ஒருநாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.

  கடைசி ஒருநாள் ஆட்டம் பிப்ரவரி 1-ம் தேதி பெர்த் நகரில் நடைபெறும்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஃபிப்ரவரி 14-ம் தேதியில் இருந்து மார்ச் 29-ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

  அதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா செல்வதன் மூலம் அங்குள்ள சூழலை நன்கு புரிந்து கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

   

  முத்தரப்பு ஒருநாள் தொடர் அட்டவணை

  தேதி அணிகள் இடம்

  ஜனவரி 16 ஆஸ்திரேலியா - இந்தியா மெல்போர்ன்

  ஜனவரி 18 ஆஸ்திரேலியா - இங்கிலாந்து சிட்னி

  ஜனவரி 20 இந்தியா - இங்கிலாந்து பிரிஸ்பேன்

  ஜனவரி 23 ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஹோபர்ட்

  ஜனவரி 26 இந்தியா - ஆஸ்திரேலியா சிட்னி

  ஜனவரி 30 இந்தியா - இங்கிலாந்து பெர்த்

  பிப்ரவரி 1 இறுதிச் சுற்று பெர்த்

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai