சுடச்சுட

  

  மாற்று வீரர்களாக களமிறங்கிய லெராய் ஃபெர், மெம்பிஸ் டெபே ஆகியோர் கோல் அடித்து உதவ சிலிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

  முதல் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி குரூப் பி பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டு வெற்றிகள் பெற்றி தென் அமெரிக்க நாடான சிலி 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

  சா பாலோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணியின் ராபின் வேன் பெர்ஸி பங்கேற்கவில்லை. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் டேரில் ஜன்மத் கொடுத்த கிராஸே லெராய் தலையால் முட்டி கோல் அடித்தார். அதேபோல இஞ்சுரி டைமில் (90+2) ராபென் கொடுத்த கிராûஸ டெபே தலையால் முட்டி வலைக்குள் செலுத்தினார். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

   

  காலம் கடந்த வெற்றி

  உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே 2 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்த ஸ்பெயினுக்கு, இந்த வெற்றி கெüரவத்துடன் நாடு திரும்பும் உற்சாகத்தை அளித்திருக்கும்.

  ஸ்பெயின் அணியில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள டேவிட் வில்லா, 36ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் அந்த அணியின் டாரஸ் 69ஆவது நிமிடத்திலும், ஜூவான் மெடா 82ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

  முன்னணி வீரர்கள் இல்லாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய அணியினால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. லீக் சுற்றின் 3 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தோற்றது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai