சுடச்சுட

  

  உலகக் கோப்பைக்கு நீல சாயம் பூசும் இத்தாலியின் கனவு, தொடக்கத்திலேயே முடிந்து விட்டது. உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோற்றது.

  புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. அதனால், இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இத்தாலிக்கு இருந்தது. கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் உருகுவே களமிறங்கியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களுக்கும் இடையேயான உஷ்ணம் அதிகரித்தது. அதனால், எதிரணி வீரர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவாறே ஆட்டம் 80 நிமிடம் வரை நகர்ந்து சென்றது.

  ஆனால், 81ஆவது நிமிடத்தில் உருகுவேயின் கேப்டன் டியாகோ கோடின் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால், அடுத்த 14 நிமிடங்கள் (இஞ்சுரி டைமுடன்) தங்களது இதயத்தின் மீது கைவைத்தவாறே இத்தாலி ரசிகர்கள் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், நேரத்தைக் கடத்திய உருகுவே, இறுதியில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

  டி பிரிவில் நடைபெற்ற இங்கிலாந்து,கோஸ்டா ரிகா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. லீக் சுற்றில் வெற்றியைப் பதிவு செய்யாமலே, நாடு திரும்புகிறது இங்கிலாந்து.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai