சுடச்சுட

  

  "கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர்களை 2 முறை ஏற்கெனவே கடித்து விட்டார். தற்போது 3ஆவது முறையாகவும் அதே தவறைச் செய்துள்ளார். அதனால், 2 ஆண்டுகளுக்கும் மேல் அவரை தடை செய்ய வேண்டும்' என்ற உலகம் முழுவதும் உருகுவேயின் லூயிஸ் செளரஸூக்கு எதிராகக் குரல் எழுந்துள்ளன.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் அந்த அணியின் சிலினியின் மீது ஆத்திரம் கொண்ட செளரஸ், அவரது தோல் பகுதியில் கடித்தார்.

  உலகக் கோப்பையில் இதுபோன்ற செயல்கள் சகித்துக் கொள்ள முடியாதது என்ற ஆங்கில ஊடகங்கள் முதல் பக்கத்திலேயே இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டு குறித்து அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கை தொடங்கி உள்ளதாக ஃபிஃபா புதன்கிழமை அறிவித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஃபிஃபா விதிப்படி செளரஸூக்கு குறைந்த பட்ச தண்டனையாக 2 ஆட்டங்களுக்கும், அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்கும் தடை விதிக்க வாய்ப்புள்ளது.

   

  "செளரஸ் ஒரு விலங்கு'

  செளரஸ் மீது பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தபோதும், பிரிட்டன் பத்திரிகைககள் கடுமையான சொற்களைக் கொண்டு செளரûஸ வசை பாடியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் பெற்ற புகழை தற்போது செளரஸ் இழந்து கொண்டிருக்கிறார். அந்நாட்டு பத்திரிகைகளின் கண்டனம் வருமாறு: "செளரஸ் ஒரு விலங்கு' என்று தி சன் பத்திரிகையும், "செளரûஸ ஃபிஃபா ஒதுக்கி வைக்க வேண்டும்' என்று டெய்லி மெய்லிலும், "உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து செளரஸூக்கு அனுமதி அளிப்பது அபாயம்' என டெய்லி டெலிகிராப் பத்திரிகையும் எச்சரித்துள்ளன.

   

  லிவர்புல் பெயருக்கு களங்கம்

  இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடும் லிவர்புல் அணியில் செளரஸ் இடம் பிடித்துள்ளார். இந்த சீசனின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் வென்றுள்ளார். ஏற்கெனவே 2 முறை கிளப் அணியின் நற்பெயரை களங்கப்படுத்திய செளரஸ், தற்போது மீண்டுமொருமுறை அதே செயலை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராபி ஃபெளலர் தெரிவித்துள்ளார்.

  "வீரர் என்ற முறையில் அவரை நேசிக்கிறேன். அதற்காக அவரது ஒழுங்கீனமற்ற செயலை மன்னிக்க முடியாது. அதனால், அவரை அணியிலிருந்து கண்டிப்பாக நீக்க வேண்டும்' என்றும் அவர் கூறியுள்ளார். லிவர்புல் அணியிலிருந்து செளரûஸ நீக்க 67 சதவீத ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

   

  இதற்கு முன் பெற்ற தண்டனை...

  2010-இல் அஜக்ஸ் அணிக்காக ஆடியபோது பிஎஸ்வி எண்டோவன் அணியின் ஓட்மனின் தோள்பட்டையைக் கடித்ததற்காக, ஏழு ஆட்டங்களில் விளையாட செளரஸூக்கு தடை விதிக்கப்பட்டது. 2013-இல் சௌரஸ் லிவர்புல் அணிக்காக ஆடியபோது செல்சீ அணியின் பிரனிஸ்லேவ் இவானோவிச் கையைக் கடித்தார். இதனால், செளரஸூக்கு பத்து ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டது.

   

  மனநல மருத்துவம் தேவை

  குழந்தைகள் கொண்டுள்ள கடிக்கும் பழக்கத்தையுடைய செளரஸூக்கு உரிய மனநல மருத்துவம் தேவை. சிறந்த முன்கள வீரரான செளரஸ், பலருக்கு முன் மாதிரியாக விளங்கி வருகிறார். அவரது கால்பந்து வாழ்வை சிதைக்காமல், மருத்துவம் அளித்து சிறந்த வீரராக மீட்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுந்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai