சுடச்சுட

  
  GREECE

  ஜார்ஜியஸ் சமரஸ் இஞ்சுரி டைம் எனப்படும் கூடுதல் நேரத்தில் பெனால்டி கிக்கை கோலாக மாற்றியதன் மூலம் கிரேக்க அணி 2-1 என ஐவரி கோஸ்டை தோற்கடித்தது. இதன் மூலம் கிரேக்கம் முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

  குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஃபோர்டெல்ஸாவில் நடந்தது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்புடன் போராடின. ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ஆண்ட்ரியஸ் சமரிஸ் ஒரு கோல் அடிக்க கிரேக்க அணி முதல் பாதியின்போது 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு 74-வது நிமிடத்தில் ஐவரி கோஸ்டின் வில்ஃபிரைடு கோனி ஒரு கோல் அடித்து பதிலடி கொடுக்க 1-1 என சமநிலை அடைந்தது. 90 நிமிடங்கள் வரை இந்த நிலையே நீடித்தது. ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இஞ்சுரி டைமில் (90+3) பெனால்டி பாக்ஸ் எல்லைக்குள் கிரேக்க வீரர் சமரஸின் காலை, ஐவரி கோஸ்ட் வீரர் ஜியாவனி சியோ தட்டி விட்டார். இதனால் கிரேக்க அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை சமரஸ் கோலாக்க,கிரேக்கம் 2-1 என வெற்றி பெற்றது.

  சோகத்துடன்...

  ஐவரி கோஸ்டின் யயா மற்றும் கோலா டூரே இருவரும் கடந்த வாரம் புற்றுநோயால் தங்களது சகோதரர் இறந்ததைப் பொருட்படுத்தாது ஆடியும், ஐவரி கோஸ்ட் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இது அவர்களுக்கு இரட்டை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ரெசிஃபே நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிரேக்க வெற்றி மகிழ்ச்சியில் கிரேக்க வீரர்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai