சுடச்சுட

    
    foot_ball

    ஜாக்சன் மார்டினெஸ் இரண்டாவது பாதியில் அசத்தலாக இரண்டு கோல்கள் அடிக்க ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கொலம்பியா. இதன் மூலம் குரூப் சி பிரிவில் மூன்று வெற்றிகளுடன் 9 புள்ளிகளைப் பெற்று கொலம்பியா முதலிடத்தில் உள்ளது.

    ஜப்பான் - கொலம்பியா அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் குயாபா நகரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் கொலம்பியா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஜுவான் கியுட்ரடோ கோலாக மாற்றினார். பின் முதல் பாதியின் இஞ்சுரி டைமில் (45+1) ஷிஞ்சி ஒகசாகி ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது.

    இரண்டாவது பாதியில் கொலம்பியாவின் கை ஓங்கியிருந்தது. ஜுவான் குவின்ட்ரோவுக்குப் பதிலாக களமிறங்கிய ஜேம்ஸ் ராட்ரிகெஸ் அற்புதமாக பந்தை பாஸ் செய்து உதவினார். இதனால் மார்டினெஸ் 55 மற்றும் 82-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை அடித்து ஜப்பானியர்களுக்கு கிலி ஏற்படித்தினார். போதாக்குறைக்கு ஜேம்ஸ் ராட்ரிகெஸ் தன் பங்குக்கு 90-வது நிமிடத்தில் கோல் அடித்தார். முடிவில் 4-1 என கொலம்பியா வெற்றி பெற்றது.

    இந்த தொடரின் முதல் சுற்றில் இரண்டு தோல்வி, ஒரு டிரா பெற்றுள்ள ஜப்பான் அணி 1 புள்ளியை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    உருகுவேயுடன் மோதல்: வரும் சனிக்கிழமை ரியோ டீ ஜெனீரோவில் நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா அணி உருகுவேயை எதிர்கொள்கிறது. இத்தாலி வீரரின் தோள்பட்டையைக் கடித்த செளரஸýக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில், உருகுவே முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்க நேரிடும். இது கொலம்பியாவுக்கு சாதகமாக அமையலாம்.

     

    அதிக வயதான வீரர்

    ஆட்டத்தின் 85}வது நிமிடத்தில் கொலம்பியா கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா வெளியேறினார். அவருக்குப் பதிலாக

    ஃபரிட் மண்ட்ரகன் மாற்று கோல் கீப்பராக களமிறங்கினார். மண்ட்ரகன் வயது 43. இதன் மூலம் அவர் உலகக் கோப்பையில் பங்கேற்ற அதிக வயதான வீரர் என்ற பெயரைப் பெற்றார். இதற்கு முன் கேமரூன் அணியைச் சேர்ந்த ரோஜர் மில்லா, உலகக் கோப்பையில் பங்கேற்ற அதிக வயதான (42 ஆண்டுகள், 39 நாள்கள்) வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

     

    ஆட்டங்கள்

     

    ஜூன் 26: அமெரிக்கா - ஜெர்மனி

    போர்ச்சுகல் - கானா

    (இரவு 9.30)

     

    ஜூன் 27: தென் கொரியா - பெல்ஜியம்

    அல்ஜீரியா - ரஷியா

    (அதிகாலை 1.30)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai