சுடச்சுட

  

  *சீனாவில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், வைல்டு கார்டு மூலம் பிரதான சுற்றுக்குள் நுழைந்த சீன வீராங்கனை மிங்யங் லியுவை 6-3, 6-2 என தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கினார் இந்தியாவின் அங்கிதா ரெய்னா.

  *கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலியாவில் இருந்து பங்கேற்கும் மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபிந்தர் கெளர் இடம்பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர் 53 கிலோ எடைப் பிரிவில் வாய்ப்புபெற்றுள்ளார்.

  *மத்திய அரசு போதுமான நிதி வழங்கவில்லை எனில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணியை அனுப்ப முடியாது என ஹாக்கி இந்தியா மிரட்டல் விடுத்தது. இதையடுத்து நிதி வழங்க வழிவகை செய்யப்படும் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

  *2019 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.) தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய மற்றும் தில்லி அரசுக்கு ஐ.ஓ.ஏ. செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியது.

  *காமன்வெல்த் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய ஹாக்கி அணி புதன்கிழமையில் இருந்து தில்லியில் உள்ள தயான் சந்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai