சுடச்சுட

  

  *இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 5 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்தின் உள்ளூர் அணியான லீசெஸ்டர்ஷைர் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மோதவுள்ளது. இந்த போட்டி வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. கடந்த 2011-இல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை பறிகொடுத்த இந்திய அணி இம்முறை இழந்த பெருமையை மீட்கும் என நம்பபப்படுகிறது.

  *பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் (38), 20 வயதாகும் ருபாப் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அப்பெண்ணின் சொந்த ஊரான கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஹரிபுரில் புதன்கிழமை இத்திருமணம் நடைபெற்றது என பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளன.

  *சீனாவின் ஜியான் நகரில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, போட்டித் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகோ குவடாவிடம் 0-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

  *சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு புதன்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் எட்டுமுறை ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 9ஆவது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி 9-வது இடத்தைப் பிடித்ததே தரவரிசையில் பின்தங்கியதற்கான காரணம். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், நெதர்லாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளன.

  * சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர். அடுத்த சுற்றில் சாய்னா மற்றொரு இந்திய வீராங்கனையான பி.சி.துளசியை எதிர்கொள்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai