சுடச்சுட

  
  mexico

  குரோஷியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மெக்ஸிகோ 3-1 என வெற்றி பெற்றது.

  பிரேசிலின் ரெசிஃபே நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 72-வது நிமிடத்தில், மெக்ஸிகோ கேப்டன் ரஃபேல் மார்க்யூஸ் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். பின் அந்த அணியின் ஆண்ட்ரூஸ் கார்டடோ (75-வது நிமிடம்), ஜேவியர் ஹெர்ணான்டஸ் (82) ஆகியோர் கோல் அடிக்க 3-0 என மெக்ஸிகோ முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் கோல் அடித்தார். இருப்பினும் இது குரோஷியாவின் வெற்றிக்கு உதவவில்லை.

  இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மெக்ஸிகோ அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் மெக்ஸிகா அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

   

  ஆட்டங்கள்

  ஜூன் 25: நைஜீரியா - ஆர்ஜெண்டினா

  போஸ்னியா - ஈரான்

  (இரவு 9.30)

  ஜூன் 26: ஹோண்டுராஸ் - ஸ்விட்சர்லாந்து

  (அதிகாலை 12.30)

  ஈகுவேடார் - ஃபிரான்ஸ்

  (அதிகாலை 1.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai