சுடச்சுட

  
  radwas

  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான ஆன்டி முர்ரே மற்றும் சீனாவின் லீ நா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

  லண்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள முர்ரே, ஸ்லோவேனியாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிளேஸ் ரோலாவை எதிர்கொண்டார். ஒஹியோ பல்கலையில் கடந்த ஆண்டு பட்டப் படிப்பை முடித்த ரோலா பங்கேற்கும் 10-வது சர்வதேச ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தரவரிசையில் 92-வது இடத்தில் உள்ள ரோலாவை 6-1, 6-1, 6-0 என நேர் செட்டில் எளிதில் வீழ்த்தினார் முர்ரே. இந்த ஆட்டம் 84 நிமிடங்கள் மட்டும் நீடித்தது.

  மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியாவைச் சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ், ஆஸ்திரேலியாவின் லூக் சேவிலியை வீழ்த்தினார். அதேபோல இத்தாலியின் ஃபேபியோ போக்னியும் வெற்றி பெற்றார். ஆனால், லத்வியாவின் எர்னெஸ்ட்ஸ் குல்பிஸ் மற்றும் ஃபிரான்ஸின் ரோஜர் வேஸ்லின் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

  லீ நா முன்னேற்றம்: மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற லீ நாவும், ஆஸ்திரியாவின் வோனே மெயுஸ்பர்ஜரும் மோதினர். இதில், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள லீ நா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் லீ நா, செக் குடியரசின் ஜலவோவா ஸ்ட்ரைகோவாவை எதிர்கொள்வார்.

  இப்போட்டியில் பங்கேற்கும் வயதான வீராங்கனையான அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் (34), ஜப்பானின் குரிமி நாராவை 7-6 (4), 6-1 என தோற்கடித்தார்.

  மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா 6-4, 6-0 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் கேசி டெலகுவாவை வீழ்த்தினார். செக்குடியரசின் பெட்ரோ குவிட்டோவா 6-2, 6-0 என ஜெர்மனியின் மோனா பெர்தலை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் குவிட்டோவா, வீனûஸ சந்திக்கவுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai