சுடச்சுட

  
  messi

  ஆர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது 27-வது பிறந்தநாளைக் கொண்டாடிய மறுநாள் நைஜீரியாவுக்கு எதிராக 2 கோல்கள் அடித்து கைகொடுக்க ஆர்ஜெண்டினா அணி 3-2 என வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் எஃப் பிரிவில் 9 புள்ளிகளுடன் ஆர்ஜெண்டினா முதலிடத்தில் உள்ளது.

  ஆர்ஜெண்டினா அநேகமாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்விட்சர்லாந்து அல்லது ஈகுவேடாரை எதிர்கொள்ள நேரிடும். ஆர்ஜெண்டினாவிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த போதிலும் ஆஃப்ரிக்க சாம்பியனான நைஜீரியா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்த பிரிவில் நடைபெற்ற ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் போஸ்னியா 3-1 என வெற்றி பெற்றது நைஜீரியாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது. இந்த தொடரின் முதலிரண்டு ஆட்டங்களில் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுத்து வந்த நைஜீரிய அணி, ஆர்ஜெண்டினா முன்கள வீரர்களிடம் கோட்டை விட்டது.

  போர்டோ அல்ஜிரி நகரில் புதன்கிழமை இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய இரண்டரை நிமிடத்திலேயே நைஜீரிய பின்களத்தைத் தகர்த்து கோல் அடித்தார் ஆர்ஜெண்டினாவின் நம்பிக்கை நட்சத்திரம் மெஸ்ஸி. அடுத்த 80 வினாடிகளில் நைஜீரியாவின் அஹமது முஸா கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

  அதன்பின் ஆர்ஜெண்டினாவின் டி மரியோ கோல் அடிக்க முயன்றதை நைஜீரியா கோல் கீப்பர் எனியமா அற்புதமாக தடுத்தார். பின்னர், ஃப்ரீ கிக்கின்போது பெனால்டி பாக்ஸýக்கு வெளியே இருந்து மெஸ்ஸி அடித்த பந்தை மீண்டும் எனியமா சிறப்பாகத் தடுத்தார். இருப்பினும் முதல்பாதியின் இஞ்சுரி டைமில் (45+1) ஆர்ஜெண்டினாவுக்கு மீண்டும் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. ஆனால், இந்தமுறை மெஸ்ஸி அதை அழகாக கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக (4) கோல்கள் அடித்த பிரேசிலின் நெய்மருடன் மெஸ்ஸி இணைந்து கொண்டார்.

  இரண்டாவது பாதியில் சுதாரித்த நைஜீரியாவுக்கு 47-வது நிமிடத்தில் மீண்டும் முஸா கோல் அடிக்க ஆட்டம் மீண்டும் 2-2 என சமன் ஆனது. அடுத்த மூன்று நிமிடத்தில் ஆர்ஜெண்டினாவின் ரோஜோ கோல் அடித்தார். இது சர்வதேச ஆட்டங்களில் அவர் அடிக்கும் முதல் கோல்.

  ஆர்ஜெண்டினா முன்னிலையில் இருப்பதை அறிந்து மெஸ்ஸி ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக ரிக்கார்டோ ஆல்வரேஸ் களம்புகுந்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. முடிவில் ஆர்ஜெண்டினா 3-2 என வெற்றி பெற்றது.

   

  ஆட்டங்கள்

   

  ஜூன் 26: அமெரிக்கா - ஜெர்மனி

  போர்ச்சுகல் - கானா

  (இரவு 9.30)

   

  ஜூன் 27: தென் கொரியா - பெல்ஜியம்

  அல்ஜீரியா - ரஷியா

  (அதிகாலை 1.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai