சுடச்சுட

  
  nadal

  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஃபேல் நடால், செக் குடியரசின் லூகாஸ் ரúஸாலைத் தோற்கடித்தார். இதன் மூலம் 2012-இல் இப்போட்டியில் ரúஸாலிடம் அடைந்த தோல்விக்கு நடால் பழி தீர்த்துக் கொண்டார்.

  பிரிட்டன் தலைநகர் லண்டனில் புல் தரையில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடந்தன. 2008, 2010-இல் சாம்பியன் பட்டம் வென்ற நடால், தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ள ரúஸாலை எதிர் கொண்டார். நான்கு செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் நடால் 4-6, 7-6(6), 6-4, 6-4 என வெற்றி பெற்றார். நடால் அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கினை எதிர்கொள்கிறார்.

  வெற்றிக்குப் பின் நடால் கூறுகையில் "இதை பழி தீர்க்கும் தருணமாகக் கருதவில்லை. அனைத்து ஆட்டங்களுமே வித்தியாசமானது. 2012-இல் நான் தோல்வியடைந்தபோது என்னை எதிர்த்து ஆடியவர் வலுவாக இருந்தார். எதிர்த்து ஆடுபவர் யார் எனக் கவலையில்லை. முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் இலக்கு. இந்த ஆட்டத்தில் சிறிது களைப்படைந்ததாக உணர்ந்தேன். சிறிது பதற்றமும் இருந்தது. முடிவில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி' என்றார்.

  மற்றொரு ஆட்டத்தில் ஃபிரான்ஸின் வில்ஃபிரைடு சோங்கா, அமெரிக்காவின் சாம் குரேயைத் தோற்கடித்தார். ஆனால், மற்றொரு ஃபிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கட், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாஸிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

  செரீனா வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ரஷிய வீராங்கனை சேனெலி சீப்பர்ஸை வீழ்த்தினார். செர்பியாவின் அனா இவானோவிச்சும், சீனாவின் ஜெங் ஜீயும் மோதிய ஆட்டத்தில் 6-4, 6-0 என்ற நேர் செட்டில் இவானோவிச் வெற்றி பெற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai