சுடச்சுட

  

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெவால் முன்னேறியுள்ளார்.

  சிட்னி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிச்சுற்றில் சாய்னா 21-18, 21-9 என்ற நேர் செட்களில் ஜப்பானைச் சேர்ந்த எரிகோ ஹிரோûஸ வீழ்த்தினார். இந்த ஆட்டத்தை 47 நிமிடங்களுக்கு சாய்னா முடிவுக்குக் கொண்டு வந்தார். இவர், தனது அரையிறுதிச்சுற்றில் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் ஷிக்ஸியான் வாங்குடன் மோதுகிறார். சமீபகாலமாக விளையாடி வரும் தொடர்களில் பின்னடைவைச் சந்தித்து வரும் சாய்னா, இம்முறை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, 17-21, 17-21 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கரோலினா மரினுடன் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai