சுடச்சுட

  
  algeria

  :குரூப் எச் பிரிவிலான லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தியது.

  இந்த ஆட்டத்தில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில், களமிறங்கிய தென் கொரிய அணிக்கு இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் வெர்டோன்கென் ஒரு கோலடித்தார். இதனால், ஆசிய அணிகளுள் கடைசி நம்பிக்கையாக களத்தில் இருந்த தென் கொரியாவும் லீக் சுற்றிலேயே வெளியேற நேரிட்டது.

  இந்த வெற்றியின்மூலம் புள்ளிகள் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெல்ஜியம் பிடித்தது.

  இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவும், அல்ஜீரியாவும் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது. இருப்பினும், லீக் சுற்றில் ஒரு வெற்றியைப் பெற்றிருந்த நைஜீரிய அணி 4 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

  உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு நைஜீரிய அணி, தற்போதுதான் முதன்முறையாக முன்னேறியுள்ளது. இந்த வெற்றி நைஜீரிய நாட்டின் தெருக்களில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

  வெற்றி குறித்து அந்த அணியின் இஸ்லாம் ஸ்லிமனி கூறுகையில், "எங்களால் முடியும் என்று நினைத்தோம். செயல்படுத்தினோம்' என்று பெருமிதத்துடன் கூறினார். ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்திலேயே ரஷியா முதல் கோல் அடித்தது. பின், 60ஆவது நிமிடத்தில் ஸ்லிமனி, தலையால் அடித்த கோல் ஆட்டத்தை டிராவாக்கியது. வளர்ந்து வரும் நட்சத்திரமாகக் கருதப்படும் ஸ்லிமனி, இத்தொடரில் இதுவரை 3 கோல்களை அடித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai