சுடச்சுட

  
  ronal

  உலக கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் ஜி பிரிவில் நடைபெற்ற கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என போர்ச்சுகல் வெற்றி பெற்றது. போர்ச்சுகலின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த உலகக் கோப்பையில் தனது முதல் கோலை அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். ஆனால், அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் ஏராளமான கோல் அடிக்கும் வாய்ப்புகளை அவர் வீணாக்கினார்.

  போர்ச்சுகலின் முன்கள வீரர்கள் கோல் அடிக்க ரொனால்டோவை மட்டுமே நம்பியிருந்தனர். இதனால் கூடுமானவரை அவரிடம் பந்தை பாஸ் செய்தனர். ஆனால் அந்த வாய்ப்புகளை எல்லாம் ரொனால்டோ கோலாக மாற்றத் தவறினார். அதனால்தான் என்னவோ 80-வது நிமிடத்தில் கோல் அடித்தபோது எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி எளிதாக கடந்து சென்றார்.

  பிரேசிலியாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் கானாவின் ஜான் போயே "சேம் சைடு' கோல் அடித்தார். மிகல் வெலோசோ கொடுத்த கிராûஸ தடுக்க முற்பட்டபோது பந்து போயே முழங்காலில் பட்டு கோல் கம்பத்தின் வலது மூலையில் உள்ளே பாய்ந்தது. இதனால் போர்ச்சுகல் 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர், 57-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸýக்கு வெளியே இருந்து வட்வோ அசமோ கொடுத்த கிராûஸ ஜியான் தலையால் முட்டி கோல் அடித்தார். ஆட்டம் 1- 1 என சமன் ஆனது. இதற்கு ரொனால்டோ கோல் அடித்து பதிலடி கொடுத்தார். கடைசி நேரத்தில் போர்ச்சுகல் வீரர்கள் கோல் அடிக்க போராடியும் முயற்சி பலனளிக்கவில்லை. இருப்பினும், ஆட்ட முடிவில் 2-1 என போர்ச்சுகல் வெற்றி பெற்றது.

   

  ஜெர்மனி வெற்றி: ரெசிஃபே நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், 55-வது நிமிடத்தில் ஜெர்மனியின் தாமஸ் முல்லர் 20 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு கோல் அடித்தார். இதற்கு கடைசி வரை அமெரிக்கா பதிலடி கொடுக்கவில்லை. இதனால் ஜெர்மனி வெற்றி பெற்றது. அமெரிக்கா தோல்வியடைந்தபோதிலும் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

   

  போர்ச்சுகல் வெளியேறியது ஏன்?

  குரூப் சுற்றில் போர்ச்சுகல் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகளைப் பெற்றது. அமெரிக்காவும் 4 புள்ளிகளைப் பெற்றிருந்தது. அமெரிக்காவும், போர்ச்சுகலும் மூன்று ஆட்டங்களில் நான்கு கோல்கள் அடித்திருந்தன. ஆனால், போர்ச்சுகல் மூன்று ஆட்டங்களின் முடிவில் எதிரணிகளை 7 கோல்கள் வரை அடிக்க வாய்ப்பளித்து விட்டது. அமெரிக்கா எதிரணிக்கு 4 கோல்கள் மட்டுமே அடிக்க வாய்ப்பு அளித்தது. எனவே, கோல்களின் அடிப்படையில் அமெரிக்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

   

  தோல்வியால் பதவி விலகியவர்கள்

  *ஹோண்டுராஸ் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் லூயிஸ் ஃபெர்ணான்டோ செüரஸ் பதவி விலகினார். "மன்னித்து விடுங்கள், என்னால் வெற்றிபெற முடியவில்லை. உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது என் கனவு. இது நனவாகாதது வருத்தம் அளிக்கிறது' என லூயிஸ் தெரிவித்தார்.

  *ஆசிய சாம்பியனான ஜப்பானும் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதற்குப் பொறுப்பேற்று ஜப்பான் பயிற்சியாளர் ஆல்பெர்டோ ஜசெரோனி பதவி விலகினார். "இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது. இரண்டாவது சுற்றுக்கு முன்னேற போராடியும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்' என்றார்.

  ஆனால், 1958-க்குப் பின் உலகக் கோப்பையில் மோசமான தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து அணியின் மேலாளர் ராய் ஹட்ஜ்சன் மட்டும் பதவி விலக மறுத்துள்ளார்.

   

  ஆட்டங்கள்

   

  ஜூன் 28: பிரேசில் - சிலி

  (இரவு 9.30)

  ஜூன் 29: கொலம்பியா - உருகுவே

  (அதிகாலை 1.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai