சுடச்சுட

  
  saina

  ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் முன்னேறினார்.

  ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சாய்னாவும், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷிஜியான் வங்கும் மோதினர். இருவரும் இதற்கு முன் பலமுறை மோதியுள்ளனர் என்பதால், பரஸ்பரம் இருவரது ஆட்ட யுத்திகளையும் ஒருவருக்கொருவர் தெரிந்து வைத்திருந்தனர்.

  ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் வரை நீண்ட இந்த ஆட்டத்தின் முடிவில் 21-19, 16-21, 21-15 என சாய்னா வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதோடு, சீன வீராங்கனைக்கு எதிராக பெற்ற வெற்றியின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்திக் கொண்டார்.

  "3 செட் வரை நீடித்த ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வீராங்கனையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது' என சாய்னா வெற்றிக்குப் பின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

  இறுதிச் சுற்றில் சாய்னா, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர் கொள்கிறார்.

  நீண்ட இடைவெளிக்குப் பின் சாய்னா உலக சூப்பர் சீரிஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கடைசியாக அவர் 2012-இல் ஃபிரெஞ்சு சூப்பர் சீரிஸ் தொடரில் ஃபைனல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai