சுடச்சுட

  
  urgu

  இத்தாலி வீரரின் தோள்பட்டையைக் கடித்ததால் உருகுவே அணியின் செளரஸூக்கு 9 ஆட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதோடு உலகக் கோப்பை நடைபெறும் மைதானங்களில் வலம் வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் நாடு திரும்பி விட்டார். இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த பிரச்னை குறித்து பிரபலங்கள் தெரிவித்த கருத்து.

   

  பல நேரங்களில் தகுதி வாய்ந்த நபர் பலிகடா ஆக்கப்படுவதை நாம் மறந்து விடுகிறோம். செளரஸ் விவிகாரத்தில் அவர் தவறே செய்திருப்பினும், கால்பந்துக்காக அவர் களத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.

   

  ஆஸ்கர் டேபரெஸ், உருகுவே பயிற்சியாளர்.

   

  அவர் (செளரஸ்) செய்தது நியாயமில்லாதது. சௌரஸூக்கு தடை விதிப்பது குறித்து ஏழு பேர் கொண்ட குழு முடிவெடுத்தது. அவரது நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த பின்னரே குழுவினர் இந்தத் தடையை விதித்துள்ளனர்.

   

  செப் பிளேட்டர், ஃபிஃபா தலைவர்.

   

  செளரஸூக்கு தடை விதித்த ஃபிஃபாவின் முடிவு சரியானது. தடை விதிக்கப்படவில்லை எனில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழும். செளரஸ் செய்ததை வேறு எந்த வீரரும் செய்யக் கூடாது. அவருக்கு விதிக்கப்பட் தண்டனை மற்ற வீரர்களுக்கு சிறந்த பாடமாக இருக்கும்.

   

  பீலே, கால்பந்து ஜாம்பவான்.

   

  சௌரஸூக்கு தடை விதிக்கப்பட்டது உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் நீடித்து நிற்கும் அவமானம்.

   

  ஜோஸ் முஜிகா, உருகுவே அதிபர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai