சுடச்சுட

  
  muller

  "கோல்டன் பூட் விருது என் இலக்கல்ல, சாம்பியன் பட்டம் வெல்வதே எங்கள் நோக்கம்' என ஜெர்மனியின் தாமஸ் முல்லர் (24) தெரிவித்துள்ளார்.

  ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா முதன் முதலில் தாமஸ் முல்லரைப் பார்த்தபோது "பால் பாய்' என தவறுதலாக நினைத்து விட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், கடந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்ததோடு, கோல்கள் அடிக்க உதவி செய்த முல்லர், கோல்டன் பூட் விருதையும், வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் வென்றார்.

  இந்த உலகக் கோப்பையில் குரூப் சுற்றில் போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் தாமஸ் முல்லர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து கைகொடுக்க ஜெர்மனி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அத்தோடு அவர் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் ஒரு கோல் அடித்தார்.

  இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (4) அடித்தவர்கள் வரிசையில் ஆர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மர் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

  எனவே இந்தமுறையும் முல்லர் கோல்டன் பூட் விருதை வாங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.

  இதுகுறித்து தாமஸ் முல்லர் அளித்த பேட்டி:

  அதிக கோல்கள் அடித்து சாதனை படைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இல்லை. ஏற்கெனவே கோல்டன் பூட் விருது வாங்கி விட்டேன். ஜெர்மனி உலக கோப்பையை வெல்ல வேண்டும். உலக சாம்பியன் வென்ற ஜெர்மனி அணியில் நான் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை என்றார்.

  உலகக் கோப்பையில் இதுவரையிலும் முல்லர் 9 கோல்கள் அடித்துள்ளார். இது மாரடோனாவை விட ஒரு கோல் அதிகம். எனவே முல்லரை "ஜெர்மனியின் மாடரோனா' என புகழ்கின்றனர். ஆனால், முல்லர் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai