சுடச்சுட

  

  பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி: கிராமப்புற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

  By dn  |   Published on : 28th June 2014 10:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மண்டல அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 100 கிராமப்புற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

  மதுரையில் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் சனிக்கிழமை காலை இப் போட்டிகள் துவங்கின. இதில் மதுரை,திருச்சி,திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 100 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள் அனைவரும் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில், கண் பார்வை குறைபாடு உடையவர்கள், மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள் ஆகியோரும் இடம்பெற்றனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

  முன்னதாக, மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் போட்டிகளைத் துவக்கி வைத்து பேசுகையில், "பாரா ஒலிம்பிக் மாநில போட்டிக்கு தேர்வாகும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும். மாநில போட்டிகளில் பங்கேற்க ஆகும் செலவுத் தொகையை புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார். மேலும், அவர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கினார்.

  தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் நீச்சல் சங்க மாநில பொதுச் செயலர் பி.மாதவிலதா கூறியது: நீச்சல் திறன் அடிப்படையில், தேசிய அளவில் தமிழக மாற்றுத் திறனாளிகள் 5 வது இடத்தில் உள்ளனர். மேலும் பல வீரர்களை அடையாளம் காணவும், தமிழகத்தில் சிறப்பாக பயிற்சி அளிக்கவும் போதுமான பயிற்சியாளர்கள் இóல்லை எனறார்.

  பயிற்சியாளர் எம்.விஜயகுமார் கூறும் போது, "கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் அதிக திறன் உடையவர்களாக உள்ளனர். ஆனால், கிராமங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட வேண்டும்' என்றார்.

  போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் பிறகு சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கேற்பர் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai