சுடச்சுட

  

  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் நடால் முன்னேறினார். 3-வது சுற்றில் அவர் கஜகஸ்தானின் குகுஷ்கினை 6-7(4/7), 6-1, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

  லண்டனில் இந்த சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெற்று வருகிறது. புல் தரையில் நடைபெறும் இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் சனிக்கிழமை நடந்தது. இதில் 2008, 2010-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டம் வென்ற நடாலும், தனது மனைவியைப் பயிற்சியாளராகப் பெற்றுள்ள குகுஷ்கினும் மோதினர்.

  வழக்கம் போல முதல் செட்டை நடால் பறிகொடுத்தார். இந்த போட்டியில் நடால் முதல் செட்டைப் பறிகொடுப்பது இது மூன்றாவது முறை.

  அதன்பின், எழுச்சி பெற்ற நடால் அடுத்த செட்களை தனது வசப்படுத்தினார். இறுதியில் வெற்றியும் பெற்றார். அடுத்த சுற்றில் நடால், ஆஸ்திரேலியாவின் நிக்கி கிர்ஜாய்ஸ் அல்லது செக் குடியரசின் ஜிரி வேஸ்லே ஆகிய இருவரில் ஒருவருடன் மோதுவார்.

  வெற்றிக்குப் பின் நடால் கூறுகையில் "முதல் செட்டில் அவர் சிறப்பாக ஆடினார். நீண்ட நேரம் போராட்ட குணத்துடன் செயல்பட்டார். அதேநேரத்தில் டை பிரேக்கரில் நான் சர்வ் செய்தபோது தவறுகள் செய்தேன். டை பிரேக்கரின்போது திறமையாக ஆடிக் கொண்டிருக்கும் வீரருக்கு எதிராக சரியாக சர்வ் செய்யவில்லை எனில் அந்த செட்டை இழக்க நேரிடும். அது எனக்கு நேர்ந்தது' என்றார்.

  பிரபலங்கள் வருகை: நடால் மோதிய ஆட்டத்தைப் பார்க்க பிரபலங்கள் குவிந்திருந்தனர். கிரிக்கெட் வீரர் சச்சின், கால்பந்து வீரர் பெக்காம், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவார்ட் பிராட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ஆட்டத்தைக் கண்டுகளித்தனர்.

  முன்னதாக மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai