சுடச்சுட

  
  sports1

  ஜேம்ஸ் அடித்த முதல் கோல் இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல்களில் ஒன்று. இந்த உலகக் கோப்பையில் அவர் சிறந்த வீரராக உருவெடுப்பார். பிரத்யேக திறமை பெற்றிருக்கும் வீரர்கள் வழக்கத்துக்கு மாறாக எதையாவது வித்தியாசமாக செய்வர். மாரடோனா, மெஸ்ஸி, செüரஸ் மற்றும் ஜேம்ஸ் ராட்ரிகெஸ் ஆகியோர் விஷேச திறமை பெற்றுள்ளனர். அதுதான் அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றுகிறது.

   

  ஆஸ்கர் டேபரஸ், உருகுவே பயிற்சியாளர்

  காலிறுதியில் பிரேசிலை எதிர்த்து ஆட இருப்பது எங்களுக்கு எவ்வித நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. பிரேசிலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அந்த அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அதேநேரத்தில் எங்களிடமும் சில அபாயகரமான வீரர்கள் இருக்கின்றனர். இதை அவர்கள் கவனிக்க வேண்டும். மொத்தத்தில் காலிறுதி ஆட்டம் சுவராஸ்யமாக இருக்கும்.

   

  ஜேம்ஸ் ராட்ரிகெஸ், கொலம்பியா வீரர்.

  கால்பந்து வரலாற்றில் புதிய வரலாறு படைக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரேசில் கடினமான முடிவுகளை எடுக்கவும், வாய்ப்புகளை உருவாக்கவும் விரும்பவில்லை. அவர்கள் பெனால்டி ஷூட் அவுட்டுக்காகக் காத்திருந்ததுபோலத் தெரிந்தது. கிட்டத்தட்ட நாங்கள் வெற்றிக்கு அருகில் வந்து விட்டோம். ஆனால், ஷூட் அவுட் எங்களுக்கு சாதகமாக இல்லை. எல்லாவற்றையும் விட அதிர்ஷ்டம் வேண்டும் போல. இருப்பினும் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

   

  ஜார்ஜ் சம்போலி, சிலி பயிற்சியாளர்.

  சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தவில்லை எனில் வாய்ப்புகள் நழுவிச் சென்று விடும். இரண்டாவது கோல் அடிக்க எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், இலக்கை நோக்கிய ஷாட்டுகள் அடித்தும் எங்களால் கோல் அடிக்க முடியவில்லை. ரிஸ்க் எடுக்க வேண்டிய தருணத்தில் கோல் அடிக்க இயலாது. அதிர்ஷ்டம் இல்லையெனில் அதிக தவறுகள் செய்திருப்போம். வெற்றி நழுவி இருக்கும்.

   

  லூயிஸ் ஃபெலிப் ஸ்காலரி, பிரேசில் பயிற்சியாளர்.

  பிரேசில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. எங்கள் அடுத்த ஆட்டங்களில் ஷூட் அவுட் இருக்காது என நம்புகிறேன். ஏனெனில், மனநோயால் எங்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவர்.

   

  ஜூலியோ சிஸார், பிரேசில் கோல் கீப்பர்

   

  ஆட்டங்கள்

   

  ஜூன் 30: ஃபிரான்ஸ் - நைஜீரியா (இரவு 9.30)

  ஜூலை 1: ஜெர்மனி - அல்ஜீரியா (அதிகாலை 1.30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai