சுடச்சுட

  

  காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்: பெனால்டி ஷூட்டில் சிலியை வீழ்த்தியது

  By dn  |   Published on : 29th June 2014 11:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sports2]

  உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிலியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்.

  நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. இதனால் 30 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் முடிவு நிர்ணயிக்கப்பட்டது.

  பெலோ ஹரிஸான்டே நகரில் சனிக்கிழமை இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் டேவிட் லூயிஸ் ஒரு கோல் அடித்தார். லெஃப்ட் கார்னரில் இருந்து நெய்மர் அடித்த பந்து லூயிஸ் முழங்காலில் பட்டு வலைக்குள் புகுந்தது. பின்னர் 32-வது நிமிடத்தில் பிரேசில் வீரர்களின் பின்களத்தை தகர்த்து அலெக்சிஸ் சான்செஸ் அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல்பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை அடைந்தது.

  55-வது நிமிடத்தில் நெய்மர் அடித்த கார்னர் கிக்கை தனது மார்பில் தாங்கி ஹல்க் கோல் அடித்தார். ஆனால், பந்து ஹல்க்கின் வலது கையில் பட்டு சென்றதாக துணை நடுவர் தெரிவித்தார். இதனால் அது கோல் இல்லை என அறிவிக்கப்பட்டதோடு ஹல்குக்கு மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டது. பின், இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்கவில்லை.

  கூடுதல் நேரம்: கூடுதல் நேரத்தில் சிலி அணியின் பினிலா அடித்த பந்து கோல் கம்பத்தின் மேலே விளிம்பில் பட்டு எகிறியது. அப்போதே சிலி அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பது தெளிவானது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

  பிரேசில் வெற்றி: இதைத் தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில், பிரேசிலின் டேவிட் லூயிஸ், மார்செலோ, நெய்மர் பந்தை வலைக்குள் செலுத்தினர். ஆனால், வில்லியன் பந்தை கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தார். ஹல்க் அடித்த பந்தை சிலி அணியின் கோல் கீப்பர் பிராவோ தடுத்து விட்டார்.

  சிலி தரப்பில் மெüரியோ பினிலா மற்றும் அலெக்சிஸ் சான்செஸ் அடித்த பந்தை பிரேசில் கோல் கீப்பர் சிஸார் அழகாகத் தடுத்தார். பின் சார்லஸ் அரங்குஸ் மற்றும் மார்சிலோ தியாஸ் ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால், கடைசி வாய்ப்பை கான்சலோ ஜாரா மிஸ் செய்தார். அவர் அடித்த பந்து வலது கோல் கம்பத்தில் பட்டு வெளியே வந்தது.

  இதனால் 3-2 என பிரேசில் வெற்றி பெற்றது.

  பிரேசில் அணியின் கோல் கீப்பர் சிஸார் இரண்டு கோல்களை அற்புதமாகத் தடுத்து வெற்றிக்கு பெரும்பங்காற்றினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai