சுடச்சுட

    

    ஜேம்ஸ் அசத்தலில் கொலம்பியா வெற்றி: காலிறுதியில் பிரேசிலுடன் மோதல்

    By dn  |   Published on : 29th June 2014 11:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    james

    கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது இளம் வீரர் ஜேம்ஸ் ராட்ரிகெஸ் உருகுவேக்கு எதிராக அசத்தலாக இரண்டு கோல்கள் அடிக்க கொலம்பியா அணி 2-0 என வெற்றி பெற்றது. இதன் மூலம் கொலம்பியா அணி முதன்முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் அந்த அணி பிரேசிலை சந்திக்கிறது.

    கொலம்பியாவும், உருகுவேயும் மோதிய காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ரியோ டீ ஜெனீரோவில் உள்ள மரகானா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது. ஆட்டத்தைப் பார்க்க வந்தவர்கள் உருகுவே அணியில் நட்சத்திர வீரர் (கடி மன்னன்) செüரஸ் இல்லாததைப் பற்றி பேசியபடியே மைதானத்தில் நுழைந்தனர். ஆனால், வெளியே செல்லும்போது அனைவரும் உச்சரித்த பெயர் ஜேம்ஸ் ராட்ரிகெஸ்.

    ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் சக வீரர் தலையால் முட்டிக் கொடுத்த கிராûஸ மார்பில் வாங்கிய ஜேம்ஸ், பந்து கீழே விழுவதற்கு முன் அதை அற்புதமாக உதைக்க, பந்து அழகாக வலைக்குள் பாய்ந்தது. இந்த கோலை அவர் 25 மீட்டர் தூரத்தில் இருந்து அடித்தார். பின், 50-வது நிமிடத்தில் உருகுவே எல்லையில் ஆதிக்கம் செலுத்தினர் கொலம்பிய வீரர்கள். அப்போது தன்னிடம் பந்து கிடைத்த மாத்திரத்தில் அதையும் அற்புதமாக கோல் அடித்தார் ஜேம்ஸ்.

    இதற்கு கடைசி வரை உருகுவே வீரர்களால் பதிலடி கொடுக்கவே முடியவில்லை. முடிவில் கொலம்பியா 2-0 என வெற்றி பெற்றது.

    கொலம்பியாவை காலிறுதிக்கு முன்னேற வைத்ததில் பெரும்பாங்காற்றிய ஜேம்ஸ் ராட்ரிகெஸ் இந்த உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்கள் அடித்துள்ளார். இதனால் அவர் கோல்டன் பூட் விருதை வெல்லும் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

     

    ஆஃப் சைடு...

     

     

    *2002 உலகக் கோப்பையின் முதல் நான்கு ஆட்டங்களிலும் பிரேசிலின் ரொனால்டோ மற்றும் ரிவால்டோ கோல் அடித்திருந்தனர். அதற்கு அடுத்து இந்தமுறைதான் கொலம்பியாவின் ஜேம்ஸ் ராட்ரிகெஸ் முதல் நான்கு ஆட்டங்களிலும் கோல் அடித்துள்ளார்.

    *கொலம்பியாவின் ஜூவான் கியட்ரடோ இந்த உலகக் கோப்பையில் வேறு எந்த வீரரையும் விட அதிகமுறை (4) கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai