சுடச்சுட

  
  saina_cup

  ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால், ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை இப்போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சாய்னா 21-18, 21-11 என்ற செட் கணக்கில் கரோலினா மரினை எளிதில் வீழ்த்தினார்.

  இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் சாய்னாவுக்கு சூப்பர் சீரிஸ் பட்டம் கிடைத்துள்ளது. இதற்கு முன் 2012-இல் இந்தோனேஷிய ஓபன் பட்டம் வென்றதே கடைசி சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.

  வெற்றிக்குப் பின் சாய்னா கூறுகையில் "கடின உழைப்புக்கு பரிசு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நடப்பு சாம்பியன் என்கிற முறையில் காமன்வெல்த் மற்றும் ஆசியப் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளேன். அதில் சாதிப்பதற்கான தன்னம்பிக்கையை இந்த வெற்றி அளித்துள்ளது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai