சுடச்சுட

  
  keep

  கடைசி நேரத்தில் வேஸ்லி ஸ்னீஜ்டர் மற்றும் க்ளாஸ் ஜான் ஹன்டெலர் கோல் அடிக்க, மெக்ஸிகோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேறியது.

  ஃபோர்டெல்ஸாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. பொதுவாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் நெதர்லாந்து அணி 25-வது நிமிடம் வரை கோல் அடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. 26-வது நிமிடத்தில் ஸ்டீஃபன் டி ரிஜ் கொடுத்த பாûஸ ராபென் கோல் அடிக்க முயன்றார். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

  வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் 30 நிமிடங்கள் முடிந்த பின் இளைப்பாற 3 நிமிடம் தரப்பட்டத்து. முதல்பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 48-வது நிமிடத்தில் மெக்ஸிகோவின் டாஸ் சான்டோஸ் நெதர்லாந்து பின்கள வீரர்களை அற்புதமாக ஏமாற்றி 25 யார்டு தூரத்தில் இருந்து கோல் அடித்தார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஆட்டத்தில் தன் முதல் கோலைப் பதிவு செய்தார். இந்த கோலின் மூலம் 1-0 என மெக்ஸிகோ முன்னிலை பெற்றது.

  அதன்பின்னரே நெதர்லாந்து வீரர்கள் சுதாரித்தனர். ஸ்டீஃபன் டி ரிஜ் மற்றும் ராபென் அடித்த கோல் முயற்சிகளை மெக்ஸிகோ கோல் கீப்பர் கிலெர்மே ஒசாவ் தடுத்தார். இருப்பினும் ராபென் தொடர்ந்து மெக்ஸிகோ பின்கள வீரர்களை ஏமாற்றி முன்னேறினார். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் அவர் கோல் அடிப்பது தடுக்கப்பட்டது.

  பிரேசில் - சிலி ஆட்டம் போல இந்த ஆட்டமும் கூடுதல் நேரம் அல்லது ஷூட் அவுட் வரை நீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரம் நெருங்க நெருங்க நெதர்லாந்து முன்கள வீரர்கள் தாக்குதலில் இறங்கினர். 88-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை ஸ்னீட்ஜர் கோல் அடித்தார். ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது.

  இஞ்சுரி டைமில் (90+4) நெதர்லாந்து கோல் எல்லையை நெருங்கி பந்தை கடத்திச் சென்ற ராபெனை, எதிரணி வீரர்கள் கீழே தள்ளி விட்டனர். இதனால் நெதர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ஹன்டெலர் கோலாக மாற்றினார். முடிவில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

  ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன் வேன் பெர்ஸியை வெளியேற்றி ஹன்டெலரை களமிறக்கினார் பயிற்சியாளர் வேன் கால். முதல் கோல் அடிக்க உதவி புரிந்து, இரண்டாவது கோலை அடித்து பயிற்சியாளரின் முடிவை நியாயப்படுத்தினார் ஹன்டெலர்.

  வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி கோஸ்டா ரிகா அல்லது கிரேக்கம் ஆகிய இரு அணிகளில் ஒன்றுடன் மோதும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai