Enable Javscript for better performance
உலக செஸ் தகுதிச்சுற்று: ஆனந்த் மீண்டும் டிரா; முதலிடத்தில் நீடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உலக செஸ் தகுதிச்சுற்று: ஆனந்த் மீண்டும் டிரா; முதலிடத்தில் நீடிப்பு

    By dn  |   Published on : 27th March 2014 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anand

    ரஷியாவின் டிமிட்ரி ஆன்ட்ரீகினுக்கு எதிரான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 12-வது சுற்றை ஆனந்த் டிரா செய்தார். இதன் மூலம் 7.5 புள்ளிகளுடன் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆர்மேனியாவின் ஆரோனியன் 6.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    மீதமுள்ள 2 சுற்றுகளில் ஆனந்த் சுதாரிக்கும் பட்சத்தில் நவம்பர் (5-25) மாதம் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்ùஸனை மீண்டும் எதிர்த்து ஆடும் வாய்ப்பைப் பெறுவார்.

    வியாழக்கிழமை நடைபெற்ற உலக செஸ் தகுதிச் சுற்றின் 12-வது சுற்றில் ஆனந்த், ஆன்ட்ரீகின் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதன்முறையாக ஆனந்த் சோர்வடைந்தார். போட்டி முடிந்த பின் அதை ஆனந்தும் ஒப்புக் கொண்டார். அவர் கூறுகையில்,"இந்த ஆட்டத்தில் போதுமான சக்தி வெளிப்பட்டு விட்டதால் சோர்வடைந்ததைப் போல உணர்ந்தேன். அதனால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதவில்லை. எனவேதான் டிராவில் முடிக்க சம்மதித்தேன்' என்றார்.

    வெள்ளிக்கிழமை ஓய்வுக்குப் பின் அடுத்த 2 சுற்றுகளில் கர்ஜகின் மற்றும் பீட்டர் ஸ்விட்லரை எதிர் கொள்கிறார் ஆனந்த். கிளாசிக்கல் முறையிலான போட்டியில் ஆனந்த் இதற்கு முன் அந்த இருவரிடமும் தோல்வியடைந்ததில்லை என்பது சாதகம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai