Enable Javscript for better performance
கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்துக்கு முதலிட வாய்ப்பு பிரகாசம்- Dinamani

சுடச்சுட

    

    கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்துக்கு முதலிட வாய்ப்பு பிரகாசம்

    By dn  |   Published on : 27th March 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச் சுற்று தொடரில் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

    உலக செஸ் சாம்பியன் கார்ல்ùஸனுடன் மோதுபவரைத் தேர்ந்தெடுக்கும் இப்போட்டியின் 11-வது சுற்று புதன்கிழமை ரஷியாவின் கான்ட்டி மான்சிஸ்க் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியாவின் ஆனந்தும், ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கும் மோதினர். கடந்த இரண்டு சுற்றில் தோல்வியடைந்த நெருக்கடியுடன் பங்கேற்ற கிராம்னிக், "கேடலன் ஓபனிங்' முறையில் ஆட்டத்தைத் தொடங்கினார். கருப்பு நிறக் காய்களுடன் ஆடிய ஆனந்த் மிகவும் கவனத்துடன் காய்களை நகர்த்தினார். ஆட்டம் 31-வது நகர்த்தலின்போது டிரா ஆனது. இன்னும் 3 சுற்றுகள் மட்டுமே மீதமுள்ளது. ஆனந்துக்கு அடுத்ததாக ஆர்மேனியாவின் லேவன் ஆரோனியன் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அநேகமாக, ஆனந்த் இந்த தொடரில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    ஆனந்த் - கிராம்னிக் மோதல் உள்பட புதன்கிழமை நடைபெற்ற மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai