Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    *இந்திய சீனியர் ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ஜுடே ஃபெலிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான டெர்ரி வால்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவார் என ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

    *மலேசியாவின் கோலாலம்பூரில் புதன்கிழமை இந்த ஆண்டுக்கான உலக விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ஜெர்மனியைச் சேர்ந்த ஃபார்முலா ஒன் வீரர் செபாஸ்டியன் வெட்டல் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதையும், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை மிஸ்ஸி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் வென்றனர்.

    *அபுதாபியில் நடைபெற்ற சாம்பியன் கவுன்டி டெஸ்ட் போட்டியில் மெரில்போன் கிரிக்கெட் கிளப் அணி சார்பில் பங்கேற்ற இந்திய வீரர் சேவாக் டர்ஹம் அணிக்கு எதிராக 97 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மெரில்போன் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.

    *மலேசிய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் முன்னேறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai