Enable Javscript for better performance
தென் ஆப்பிரிக்கா வெற்றி: வீழ்வதற்கு முன் போராடியது நெதர்லாந்து- Dinamani

சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்கா வெற்றி: வீழ்வதற்கு முன் போராடியது நெதர்லாந்து

    By dn  |   Published on : 27th March 2014 11:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sp

    நெதர்லாந்துக்கு எதிரான இருபது ஓவர் உலகக் கோப்பையின் சூப்பர் -10 சுற்று ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி போராடி வெற்றி பெற்றது.

    நெதர்லாந்து தொடக்க வீரர் ஸ்டீபன் மைபர்க் 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசி கைகொடுத்தார். ஆனால், பின் வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் அதை சரியாகப் பயன்படுத்தவில்லை.

    இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் சிட்டகாங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். அடுத்ததாக டூ பிளஸ்ஸிஸ் 24 ரன்களும், டி வில்லியர்ஸ் 21 ரன்களும் அடித்திருந்தனர். நெதர்லாந்து அணியின் ஆஷன் மாலிக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. ஏழு ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் நெதர்லாந்து அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 18.4 ஓவர்களில் 139 ரன்களில் சுருண்டது.

    தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கடைசி கட்டத்தில் துல்லியமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடன் ஒத்துழைத்த வேகப்புயல் ஸ்டெயின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக இம்ரான் தாஹிர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கான போட்டியில் நீடித்து நிற்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai