Enable Javscript for better performance
பயிற்சியில் இந்திய வீரர்கள் உற்சாகம்- Dinamani

சுடச்சுட

    
    football

    அடுத்தடுத்த வெற்றிகளால் மன ரீதியாக புத்துணர்ச்சி அடைந்துள்ள இந்திய அணி புதன்கிழமை பயிற்சியின்போது கூடுதல் உற்சாகத்துடன் இருந்தது.

    வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது தோனி தலைமையிலான இந்திய அணி. மார்ச் 28-ம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

    இரண்டு நாள் பூரண ஓய்வுக்குப் பின் புதன்கிழமை மிர்பூரில் உள்ள ஷெரி பங்ளா மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டது.

    பொதுவாக பயிற்சியின்போது வீரர்கள் "ரிலாக்ஸாக' இருப்பர். புதன்கிழமை வழக்கத்தை விட இந்திய வீரர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இருந்தனர். காரணம், முதல் இரண்டு ஆட்டங்களில் முக்கியமான இரண்டு அணிகளை வீழ்த்தியதே.

    மைதானத்தில் பஞ்சாபி மற்றும் ஹிந்தி பாடல்கள் ஒலிக்க வீரர்கள் அதைக் கேட்டுக் கொண்டே பயிற்சி மேற்கொண்டனர். எப்போதுமே இந்திய அணி பயிற்சியின்போது கால்பந்து ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும். அதுபோல புதன்கிழமை பயிற்சியில் கால்பந்தில் தோனி ஆதிக்கம் செலுத்தி கோல்களை அடித்தார்.

    கடந்த 2 ஆட்டங்களில் மந்த கதியில் செயல்பட்ட யுவராஜ் இயல்பு நிலைக்குத் திரும்பி பயிற்சி மேற்கொண்டார். நீண்ட நேரம் ஷிகர் தவனுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த அவர் வலைப் பயிற்சியின்போது ஜடேஜா, அஸ்வின் மற்றும் அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் தீவிர பயிற்சி எடுத்தார்.

    தற்போதுதான் அணியில் இடம் பிடித்துள்ளதால் ஓய்வே எடுக்கக் கூடாது என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்த அறிவுரைப்படி, முகமது ஷமி தொடர்ந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். கேப்டன் தோனியும் பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai