Enable Javscript for better performance
மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் செரீனாவை சமாளிப்பாரா ஷரபோவா?- Dinamani

சுடச்சுட

    

    மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் செரீனாவை சமாளிப்பாரா ஷரபோவா?

    By dn  |   Published on : 27th March 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    shrapova

    மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸýம், ரஷியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவாவும் மோதவுள்ளனர். 2004-ம் ஆண்டுக்குப் பின் செரீனாவை ஷரபோவா வீழ்த்தியதே இல்லை. மேலும், தொடர்ந்து 14 ஆட்டங்களில் அவரிடம் ஷரபோவா தோல்வியடைந்துள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்திலும் இவர்கள் இருவர்தான் மோதினர். இதிலும் செரீனாவே வெற்றிபெற்றார். எனவே வியாழக்கிழமை நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஷரபோவா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

    புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனாவும், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் மோதினர். இதில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வெற்றி பெற்றார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் பெட்ரோ குவிட்டோவாவை 90 நிமிட போராட்டத்துக்குப் பின் ஷரபோவா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். ஷரபோவா கடந்த மூன்று ஆட்டங்களிலும் வெற்றிக்கு முன் கடினமாகப் போராட வேண்டியிருந்தது. இதை அவரும் ஒப்புக் கொண்டார். ஷரபோவா கூறுகையில், ""முதலில் ஒரு சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடவில்லை. தற்போது மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியது மகிழ்ச்சி. முடிந்தவரை அடுத்த ஆட்டத்தில் போராடி வெற்றிபெற முயற்சிப்பேன்' என்றார்.

    ஆடவருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் ரஃபேல் நடால், போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னியை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடால் காலிறுதியில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை சந்திக்கிறார்.

    வாவ்ரிங்கா தோல்வி: மற்ற ஆட்டங்களில் ஜப்பானின் நிஷிகோரி, ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற வாவ்ரிங்கா, உக்ரைனின் அலெக்ஸாண்டர் டால்கோபோலோவிடம் தோல்வியடைந்தார். மேலும், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    காலிறுதியில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே, தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் இறுதிச் சுற்றுக்குப் பின் முதன்முறையாக இருவரும் மோதவுள்ளனர்.

    ஷரபோவா காதலனின் கருணை!

    ஷரபோவாவின் காதலரும் பல்கேரியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரருமான கிரிகோர் டிமிட்ரி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 3-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் நிஷிகோரியை எதிர் கொண்டார். முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. அப்போது "பால் கேர்ளிடம்' துண்டு கொடுக்குமாறு கிரிகோர் கேட்டார். நீண்ட நேரமாகியும் துண்டு கைக்கு வரவில்லை. கிரிகோர் திரும்பிப் பார்த்தபோது அந்த சிறுமி மயங்கிய நிலையில் இருந்தார். ஆட்டம் கொளுத்தும் வெயிலில் நடந்தது குறிப்பிடத்தக்கது. உடனடியாக கிரிகோர் அந்த சிறுமியை ஓய்வு பெறும் இருக்கையில் அமர வைத்து, மருத்துவரின் உதவியுடன் சிகிக்சைக்கு ஏற்பாடு செய்தார்.

    இந்த ஆட்டத்தில் கிரிகோர் தோல்வியடைந்தாலும் மனிதாபிமான செயலின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai