Enable Javscript for better performance
சாம்பியன்ஸ் லீக் தொடர்: பிரதான சுற்றில் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ்- Dinamani

சுடச்சுட

    

    சாம்பியன்ஸ் லீக் தொடர்: பிரதான சுற்றில் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ்

    By dn  |   Published on : 14th September 2014 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நியூஸிலாந்தைச் சேர்ந்த நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி, பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி, பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. டேனியல் ஃபிளின் 30 பந்துகளில் 53 ரன்களும், விக்கெட் கீப்பர் வாட்லிங் 37 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தனர். லாகூர் அணியின் ஏய்சாஸ் சீமா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அடுத்து களமிறங்கிய லாகூர் லயன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நியூஸிலாந்தின் டிம் செளதி, டிரென்ட் பெளல்ட் ஆகிய இருவரும் லாகூர் லயன்ஸ் பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைத்தனர். இருவரும் இணைந்து முதல் கட்டமாக ஆறு ஓவர்களில், 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் இருந்து பாகிஸ்தான் வீரர்களால் மீண்டு வர முடியவில்லை. இறுதியில் 18 ஓவர்களில் 98 ரன்களில் லாகூர் அணி ஆல் அவுட்டானது. செளதி 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் பெளல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை லாகூர் லயன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai