Enable Javscript for better performance
டேவிஸ் கோப்பை இறுதிச் சுற்று: சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் மோதல்- Dinamani

சுடச்சுட

    

    டேவிஸ் கோப்பை இறுதிச் சுற்று: சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் மோதல்

    By dn  |   Published on : 14th September 2014 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தும், பிரான்ஸýம் மோதவுள்ளன.

    ஜெனீவாவில் நடைபெற்ற இப்போட்டியின் அரையிறுதியில் சுவிட்சர்லாந்தும், இத்தாலியும் மோதின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரிவர்ஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், ரோஜர் ஃபெடரர் 6-2, 6-3, 7-6(4) என்ற நேர் செட்களில், இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னியை வீழ்த்தினார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், ராடெக் ஸ்டொனெக் ஜோடியை ரிச்சர்ட் கேஸ்கட், ஜோ வில்ஃபிரைடு சோங்கா ஜோடி வீழ்த்தியது. இதன் மூலம் பிரான்ஸ் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai