Enable Javscript for better performance
மாநில ஹேண்ட்பால் போட்டி: திண்டுக்கல் அணி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் முழுவதிலும் இருந்து 28 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில், திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    தமிழ்நாடு ஹேண்ட் பால் சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட் பால் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டிகள், திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

    இதில், தமிழகத்தைச் சேர்ந்த 28 மாவட்ட அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் 2 சுற்றுகளாக லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்முடிவில் காலிறுதிக்கு 14 அணிகள் தகுதிபெற்றன. ஞாயிற்றுக்கிழமை நடந்த அரையிறுதியில் 33-34 என்ற கோல் கணக்கில் சேலம் அணியை வீழ்த்திய திருவள்ளூர் அணியும், 20-27 என்ற கோல் கணக்கில் மதுரை அணியை வீழ்த்திய திண்டுக்கல் அணியும், இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

    இறுதி ஆட்டத்தில் 22-9 என்ற கோல் கணக்கில், திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. திருவள்ளூர் அணி 2ஆம் இடம் பெற்றது. மழை காரணமாக மூன்றாவது இடத்திற்கான ஆட்டம் நடைபெறவில்லை. இதனால் மதுரை மற்றும் சேலம் அணிகளுக்கு 3ஆம் இடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    முதல் மூன்று இடங்களைப் பெற்ற திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் மதுரை, சேலம் அணியினருக்கு, தெற்காசிய ஹேண்ட்பால் கூட்டமைப்பின் தலைவரும், திருச்சி மண்டல காவல்துறை தலைவருமான எம்.ராமசுப்பிரமணி சுழற்கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் செயலர் ஏ.சரவணன், திண்டுக்கல் மாவட்ட செயலர் எம்.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநில அணி தேர்வு: அக்டோபர் 7 முதல் 12ஆம் தேதி வரை, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் தேசிய ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் பங்கேற்வுள்ள தமிழக அணிக்கான வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்ப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை, மாநில தலைவர் ஏ.சரவணன் வெளியிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai