Enable Javscript for better performance
லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை பழிவாங்கியது அட்லெடிகோ- Dinamani

சுடச்சுட

    

    லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை பழிவாங்கியது அட்லெடிகோ

    By dn  |   Published on : 14th September 2014 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ronal

    லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றில் அடைந்த தோல்விக்கு அட்லெடிகோ மாட்ரிட் அணி பழி தீர்த்துக் கொண்டது.

    ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையிலான ஸ்பானிஷ் லீக் கால்பந்து போட்டியின் மாட்ரிட் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், இந்த இரு அணிகளும் மோதின. இதற்கு முன் இந்த இரு அணிகளும் கடந்த சீசனில், சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றில் சந்தித்திருந்தன. அதில், ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

    மூன்று வார இடைவெளிக்குப் பின் காயத்தில் இருந்து குணமடைந்த ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணிக்குத் திரும்பி இருந்தார். முந்தைய ஆட்டத்தில் துணை நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த அட்லெடிகோ மாட்ரிட் பயிற்சியாளர் டீகோ சைமன், கேலரியில் இருந்தபடி ஆட்டத்தைக் கண்டு களித்தார்.

    ஆட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் கார்னரில் இருந்து கோக் அடித்த பந்தை தியாகோ தலையால் முட்டி கோல் அடித்தார். இதற்கு 26-வது நிமிடத்தில் பெனால்டி கிக்கை கோலாக மாற்றி பதிலடி கொடுத்தார் ரொனால்டோ. ஆனால், ஆட்டம் முடிவதற்கு 14 நிமிடங்களுக்கு முன் அட்லெடிகோ அணியின் ஆர்டா டுரன் ஒரு கோல் அடித்தார். முடிவில் அட்லெடிகோ வெற்றி பெற்றது.

    நட்சத்திர பட்டாளங்கள் அடங்கிய ரியல் மாட்ரிட் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால், மற்றொரு ஆட்டத்தில் பரம எதிரியான பார்சிலோனா அணிக்கு நெய்மர் இரண்டு கோல்கள் அடித்து உதவ அந்த அணி அத்லெடிகோ பில்பாவ் அணியை 2-0 எனத் தோற்கடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai