Enable Javscript for better performance
ஃபெடரேஷன் கோப்பை: இந்தியா மீண்டும் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    Fed

    ஃபெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசினியா குரூப் -2 பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.

    ஹைதராபாதில் நடைபெற்று வரும் இப்போட்டியில், சானியா மிர்ஸா தலைமையிலான இந்திய அணி துர்க்மெனிஸ்தானை வெள்ளிக்கிழமை எதிர்கொண்டது.

    இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எதிரணியின் அனஸ்டஃபியா ரென்கோவை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீராங்கனையான பிரார்த்தனா தாம்ப்ரே, துர்க்மெனிஸ்தானின் ஜஹானா பேரமோவாவை 6-0, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

    இதனால் இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.

    தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, இறுதி ஆட்டத்தில் இந்தோனேஷியாவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

     

    துளிகள்...

     

    * உலகக் கோப்பைத் தொடருடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், தொடர்ந்து டி -20 ஆட்டங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். பிக் பாஷ் தொடரில் அடுத்த இரண்டு சீசன்களுக்கு மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பில் ஆடுவதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai