Enable Javscript for better performance
கொல்கத்தா - பஞ்சாப் இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

    
    spt3

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள தனது அடுத்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாபை எதிர்கொள்கிறது.

    இந்த சீசனில் இதுவரை கொல்கத்தா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றுள்ளது. எனவே பஞ்சாபுக்கு எதிராக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா அணி தயாராகி வருகிறது. கேப்டன் கம்பீர் இரண்டு ஆட்டங்களிலும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தி வருகிறார். மணீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ராபின் உத்தப்பா மற்றும் ஆன்ட்ரூ ரசெல் ஆகியோரும் நன்கு ஒத்துழைக்கின்றனர்.

    ஆனால், கொல்கத்தா அணியின் பந்துவீச்சுதான் கவலையளிக்கிறது. மோர்னே மோர்கெல், சுனில் நரைன், யூசுஃப் பதான், ஷகிப் அல் ஹசன், பியூஸ் சாவ்லா ஆகியோர் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து அணிக்கு உதவ வேண்டும். சுனில் நரைன் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்தாலும், எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்தாதது பின்னடைவே.

    பஞ்சாப் அணியைப் பொருத்தவரை கடந்த மூன்று ஆட்டங்களில் இரண்டில் தோல்வியும், ஒரு ஆட்டத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. முரளி விஜய், வீரேந்திர சேவாக், டேவிட் மில்லர், ரித்திமான் சாஹா, மேக்ஸ்வெல், கேப்டன் ஜார்ஜ் பெய்லி என எதிரணியின் பந்துவீச்சு தாக்குதலை தவிடுபொடியாக்கும் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் இருந்தும் பஞ்சாபின் நிலை பரிதாபமாக உள்ளது.

    இவர்கள் எல்லோரும் பேட்டிங்கை சிறப்பாக தொடங்கினாலும், அதனை பெரிய அளவிலான ஸ்கோராக மாற்ற தவறிவிடுகின்றனர். பந்துவீச்சில் ஜான்சன், சந்தீப் சர்மா, அனுரீத் சிங் மற்றும் ரிஷி தவண் ஆகியோர் முக்கியமான கட்டங்களில் ரன்களை வாரி வழங்குகின்றனர். இதுவே அணியின் சறுக்கலுக்கு காரணம் என்பதால் கொல்கத்தாவுக்கு எந்த அளவுக்கு சவால் அளிப்பர் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai