Enable Javscript for better performance
மான்ட்டி கார்லோ டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்- Dinamani

சுடச்சுட

    
    jokovich

    மான்ட்டி கார்லோ டென்னிஸ் தொடரின் காலிறுதியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச், குரேஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மொனாக்கோ நாட்டின் மான்ட்டி கர்லோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் 65 நிமிட போராட்டத்துக்குப் பின் 6-0, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், சக நாட்டு வீரர் டேவிட் ஃபெரரை 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதியில் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடாலை எதிர்கொள்கிறார்.

    பிரான்ஸின் கேயல் மோன்ஃபில்ஸ் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுக்கு எதாரன ஆட்டத்தில் காயம் காரணமாக கனடாவின் மிலோஸ் ரயோனிக் பாதியிலேயே விலகினார். இதனால் பெர்டிச் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai