Enable Javscript for better performance
ஹைதராபாத் - தில்லி பலப்பரீட்சை- Dinamani

சுடச்சுட

    
    spt4

    விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள மற்றொரு ஐபிஎல் ஆட்டத்தில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தில்லி அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

    சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக நூலிழையில் வெற்றியை இழந்த தில்லி அணி பஞ்சாபை கடந்த ஆட்டத்தில் வீழ்த்தி உத்வேகம் பெற்றுள்ளது. யுவராஜ் சிங் மறுபடியும் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது தில்லி அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பஞ்சாபுக்கு எதிராக அவர், மயங்க் அகர்வாலுடன் கூட்டணி அமைத்து வெற்றிக்கு உதவினார். அதேபோல பந்துவீச்சில் இதுவரை 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ள இம்ரான் தாஹிர் தில்லி அணியின் வரப்பிரசாதம். தில்லி அணியின் பலமே அதன் டாப்-ஆர்டர் வீரர்கள் தான். ஹைதராபாதுக்கும் இதே நிலைதான் என்றாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறப்பாக ஆடினால்தான் வெற்றி சாத்தியமாகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai