Enable Javscript for better performance
விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும்: இயான் சேப்பல்- Dinamani

சுடச்சுட

    

    விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும்: இயான் சேப்பல்

    By DN  |   Published on : 27th January 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    IanChappell

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே களமிறங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, கிரிக்இன்ஃபோ இணையதளத்தில் சேப்பல் தெரிவித்திருப்பதாவது:

    நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரம் அடிக்கடி நிலநடுக்கத்தில் தடுமாறுவதைப் போல, இந்திய அணி உலகக் கோப்பையைத் தக்க வைப்பதிலும் தடுமாறும் எனத் தெரிகிறது.

    இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதினால், அவர்களது பேட்ஸ்மேன்கள் அதிகப்படியான ரன்களைக் குவிக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒரு நாள் ஆகிய இரு தரப்பு ஆட்டங்களிலும் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. தவறுகளைத் திருத்திக் கொண்டதாகவே தெரியவில்லை. முத்தரப்புத் தொடரில் இந்திய அணி எதையுமே சாதிக்கவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய தனது குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    விராட் கோலி இதற்கு முன் மூன்றாவது இடத்தில் அதிக ஆட்டங்களில் களமிறங்கியுள்ளார். எனவே, அவர் தொடர்ந்து அதே இடத்தில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும்.

    ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் டாப் ஆர்டரில் இருக்கும் படி அணியின் வரிசையை மாற்றி அமைக்க வேண்டும்.

    தொடக்க வீரராக ஜொலிக்கத் தவறும் ஷிகர் தவனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னியை, ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறக்கலாம். அப்படி செய்வதன் மூலம் மேலும் ஒரு பந்துவீச்சாளரைத் தேர்வு செய்ய தோனிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றார் சேப்பல். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai